பெருமை கொள்வோம், தமிழகத்திற்கு 3வது இடம் - குடிபோதையில் வாகனம் ஒட்டி உயிரிழப்பு
குடிபோதையில் வாகனம் ஓட்டி ஏற்பட்ட விபத்துகளில், அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
2011 ஆம் ஆண்டு குடிபோதை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் ஐந்தாவது இடத்தில் இருந்த தமிழகம், இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.
மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2013 ஆம் ஆண்டில் மட்டும் குடிபோதை விபத்துகளால் 718 பேர் தமிழகத்தில் பலியாகியுள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,012 பேரும், இரண்டாவதாக பீகாரில் 790 பேரும் குடிபோதை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்.
மிகவும் பெருமை கொள்ளவேண்டிய விசயம். கள்வெறி கொண்டு கலவரம் செய்வோம்!