21 நூற்றாண்டு ஆசியாவுக்க்குரியது: மடிசன் சதுக்கத்தில் மோடியின் உரை

21 நூற்றாண்டு ஆசியாவுக்க்குரியது: மடிசன் சதுக்கத்தில் மோடியின் உரை

21 நூற்றாண்டு ஆசியாவுக்க்குரியது: மடிசன் சதுக்கத்தில் மோடியின் உரை

புகழ் பெற்ற மடிசன் சதுக்கத்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசியதன் சில அம்சங்கள் வருமாறு

*பாரத் மாதா கீ ஜே என்று பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.
*நவராத்ரி விழா திருநாளுக்கு  உங்களுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
*இது போன்ற நல்ல சந்தர்ப்பங்களில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த அதிருஷ்டம்
*பாம்பாட்டிகளால் நிறைந்த நாடு இந்தியா என அறியப்பட்டது.
*இது போன்ற பிரம்மாண்டமான வளர்ச்சி உங்களால்  (இந்திய வம்சாவளியினர்) மட்டும் தான் ஏற்பட்டது
*நீங்கள் அனைவரும் இல்லை என்றால் அங்கு ஐடி தொழிற்நுட்ப புரட்சி ஏற்பட்டு இருக்காது.
*உங்கள் செயல்பாடுகள் மற்றும் மதிப்புகளால் நீங்கள் மிகப்பெரிய மதிப்பை பெற்றுள்ளீர்கள்
*நான் ஒருமுறை தைவான் சென்று இருந்த போது, அங்குள்ள ஒருவர் உங்கள் நாடு பாம்புகள் வாழும் இடம் என்றும் பாம்பாட்டிகளுகக்கான நாடு என்று தெரிவித்தார்.
*நான் அவரிடம் இல்லை இந்தியா பாம்புகளை பிடித்துக் கொண்டிருந்தது அந்தக்காலம். கம்ப்யூட்டர் மவுஸை பிடித்துக் கொண்டிருப்பது இந்தக்காலம் என கூறினேன்.
* உங்களில் பெரும்பாலனவர்களுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனால் தேர்தல் முடிவுகள் வரும்போது உங்களில் ஒருவர் கூட தூங்கியிருக்க மாட்டீர்கள். உங்களில் பெரும்பாலானோர் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு இருந்தீர்கள்.  *2014 ஆம் ஆண்டு தேர்தலில் உங்கள் பங்களிப்பு இல்லாமல் இருந்திருந்தாலும் முடிவுகள் வரும் பொழுது நீங்கள் கொண்டாடினர்.
*இந்தியாவின் பெருமையை கட்டமைத்தற்காக நான் உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
*தேர்தலில்  வெற்றி பெறுவது பதவி அல்லது நாற்காலியை பிடிப்பது மட்டும் அல்ல. அது பொறுப்பு.
*நான் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 15 நிமிடம் கூட ஓய்வு எடுக்கவில்லை.
*30 ஆண்டுகளில் முதல் முறையாக, கட்சி தனி மெஜாரிட்டியில் ஆட்சியை பிடித்துள்ளது.
* கருத்து உருவாக்குபவர்கள்  கூட உண்மையான கருத்துகளை தெரிவிப்பதில்லை.
*இந்திய மக்கள் நமது அரசாங்கத்திடம் இருந்து பல எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளது போல் இந்தியாவிடம் நீங்களும் சில எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளீர்கள்
 *நான் உங்களை (அமெரிக்க வாழ் இந்தியர்கள்) விட்டு ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கலாம். ஆனால், உங்கள் வலி என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும். (பிரதமர் மோடி)
*அமெரிக்காவும் இந்தியாவும்தான் உலகிலேயே மிக பழமையான ஜனநாயக நாடுகள். நாம் இருவரும் இணைந்தே இருக்க வேண்டும். ஜனநாயகம் என்பது ஏதோ இந்தியா நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு அமைப்பு என்று மட்டும் அர்த்தமல்ல.
*1.25 கோடி மக்கள் எனக்கு ஆசிர்வாதத்தை வழங்கியிருக்கின்றனர். ஒரு கோடி மக்களின் ஆசி என்பது சாதாரணமானது அல்ல. அது கடவுளின் ஆசி.
எனது தலைமையிலான அரசு நடப்பு ஆட்சிக்காலத்திற்குள் சாமானிய மனிதர்களுக்கும் 100 சதவீதம் திருப்தியளிக்கும் வகையில் இருக்கும் என்பதை உறுதியாக உங்களிடம் சொல்லிக் கொள்கிறேன்.
*21 ஆம் நூற்றாண்டு ஆசியாவுக்குரியது

 இவ்வாறு அவர் பேசி வருகிறார்

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்