கரூரில் வணிக மற்றும் கல்வி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட தரப்படுவதில்லை

கரூரில் வணிக மற்றும் கல்வி நிறுவனங்கள் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூட தரப்படுவதில்லை

கரூர் மாவட்டத்தில் உள்ள சில தொழில், பள்ளி மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் கூட வழங்கப்படவில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

குறைந்தபட்ச ஊதியம் எவ்ளோ இருக்கும்னு கொஞ்சம் நீங்களே பாருங்க

துறை தின ஊதியம்
பள்ளி மற்றும் பயிற்சி  வழங்கும் நிறுவனம் 119.57
மின்விசைதறி தொழில் 153.50
நெசவு ஆலை 223.85
கடை மற்றும் வணிக நிறுவனம் 160.7
வாகனப் பட்டறை 247.61

இந்த படிமணை பட்டியல் படி விதிக்கப்பட்ட ஊதியமே குறைவாகத் தான் உள்ளது. இதை கூட நாம் ஊரில்  தர மறுக்கும் பெரும் நிறுவனங்கள் நம்மை ஏமாற்றிக் கொண்டு தான் இருக்கின்றனர்.

தனியார் பள்ளிகள் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். கரூர் தொழிலாளர் துணை ஆய்வர் ராகவன் கேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்.

திண்டுக்கல் தொழி லாளர் துணை ஆணையர் சரவணன் விசாரணை நடத்தி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகையினை சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் வழங்க உத்தரவிட்டார்.

இதன்பேரில் இவர்கள் ஆய்வு செய்த நிறுவனங்களில் உள்ள 22தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத்தொகை ரூ.2லட்சத்து 28ஆயிரத்து 352க்கான வரைவோலைகள் மூலமாக சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. கரூர் தொழிலாளர் துணை ஆய்வர் ராகவன், உதவி ஆய்வர்கள் செல்வராஜ், குமரக்கண்ணன் உடன் இருந்தனர்.
மேலும் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்காத நிறுவனங்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படும் என தொழிலாளர்  ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்