ஆவின் பால் - வீடு வந்து சேரும் கதை
அங்க பெரிய தொட்டியில கேன் கேனா எடுத்து கவிழ்ப்பார்கள். கொழுப்பை பிரித்தெடுத்து பதப்படுத்தப்பட்ட பாலாக மாற்றுவதற்காக நீண்ட சில்வர் குழாய்களில் ஓடியபடியே இருக்கும். அப்படி நூறு கேன்களை எடுத்து கவிழ்த்தால் நான்காயிரம் லிட்டர் பால்…கூடவே அனாமுத்தா ஒரு ஐந்து கேன்கள் தண்ணீர் எடுத்து ஊற்றுவார்கள். பால் அப்படி இப்படியுமாக கீழே சிந்தி சேதாரமாகுமில்ல. அதை ஈடுகட்டவாம். லட்சக்கணக்கான லிட்டர் பால் என்றால் எவ்வளவு தண்ணீர்….?
இப்படி குளிரூட்டி, கொழுப்பு நீக்கிய பால் பெரிய பெரிய லாரிகளில் ஏற்றி சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு அனுப்புகிறார்கள்.அப்படி வரும்போது வழியில் பக்குவமாக சீல் உடைத்து ஆயிரம் இரண்டாயிரம்னு எடுத்துவிடுவார்கள். அங்கேயும் தண்ணீர் கலப்படம்.
ஒரு வழியாக அந்த வாகனம் நகரங்களில் உள்ள பால் பண்யைகளுக்கு வரும். அங்கு பதப்படுத்தி தரப்படுத்தும் வேலை. அங்கேயும் ஏராளமான பால் கீழே சிந்திகிக்கிடக்கும். ஆக இங்கேயும் ஈடுகட்டுவதற்கென்று தண்ணீர் கலப்பு.? அதோடு நின்றுவிடவில்லை. இன்னும் இருக்கிறது. மனதை தைரியப்படுத்திக்கொள்ளுங்கள்.
பிறகு அங்கிருந்து அந்தந்த பகுதிகளில் உள்ள பால் வினியோக நிலையத்திற்கு லாரிகளில் கொண்டு வந்து அங்குள்ள டேங்கரில் நிரப்பிவிட்டுச் செல்வார்கள். அங்கே சில்லரையில் விற்பதற்காக இருக்கும் ஆட்கள், அவர்களின் பங்கிற்கு இரண்டு குடமோ, மூன்று குடமோ தண்ணீர் கலந்துவிடுவார்கள். அவர்களின் செலவுக்கு வேண்டுமில்லையா..அதற்காக கலப்பார்கள். நம்ப ஆட்கள் அட்டை வாங்கி வைத்துக்கொண்டு, ‘ஆவின் பால்தான் பெஸ்ட்’ என்று குளிரிலும் மழையிலும் வரிசையில் நின்று வாங்குவார்களேஇ அந்த பாலின் கதை இதுதான். இப்படித்தான்..
கிராமத்தில் உள்ளவார்கள் பாலில் கொஞ்சம் தண்ணீர் கலந்து காய்ச்சி சாப்பிடுவார்கள். நகரத்தில் உள்ளவர் தண்ணீரில் கொஞ்சம் பால் கலந்து காய்ச்சி சாப்பிடுகிறார்கள். அதுவும் ரசாயணக் கலவையோடு….!
நம்ம பக்கத்து தெருல கறந்து வீட்டுக்கு கொண்டு வந்து பால் ஊற்றும் பால்கார அண்ணன் ஒரு கானுக்கு ஒரு கப் தண்ணி தான் கலக்குவாரு. இவனுங்க கப் பாலுக்கு கேன் தண்ணிய கலக்கரானுங்க!
எல்லாம் வியாபாரம் ஆக்கப்பட்டஉலகத்தில் மனிதத்தை தொழைத்துக் கொண்டிருக்கின்றோம்.........