இந்தியாவில் எங்கு சென்றாலும் அலைபேசி எண்ணை மாற்றத் தேவையில்லை

இந்தியாவில் எங்கு சென்றாலும் அலைபேசி எண்ணை மாற்றத் தேவையில்லை

செல்போன் வாடிக்கையாளர்கள் செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்வது ஏற்கெனவே  நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பொழுது இந்தியாவுக்குள் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ந்து வாழ்வோரின் வசதிக்காக மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
 
இனி மாநிலம் மாறினாலும் வாடிக்கையாளர்கள் தங்களின் தொடர்பு எண்ணை மாற்றத் தேவையில்லை. ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் மார்ச் மாதம் 31 க்குள் இந்த வசதி நடைமுறைக்கு வரும்.
 
அலைபேசி வாடிக்கையாளர்கள் பெருகி வரும் நிலையில், முழுமையான ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதியை வழங்க தொலைத் தொடர்புத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செய்துள்ள சிபாரிசை, தொலைத் தொடர்பு ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்