நாம் தென்னிந்தியர் - என்னடா ராஸ்கல்ஸ்
தென்னிந்திய மாநிலங்களிடையே காவிரி, முல்லைப் பெரியாறு, கிருஷ்ணா நதிநீர்ப் பங்கீடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம். ஆயினும் இவை அனைத்தும் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை மதராஸ் என்ற ஒரே மாகாணமாக இருந்தன. அடிப்படையில் தென்னிந்தியர்களிடையே பல்வேறு ஒற்றுமைகள் உண்டு. அதை முன்னிறுத்தும் விதமாக ஒரு காணொலி வெளியாகியுள்ளது. என்ன டா ராஸ்கல்ஸ் என்ற யூடியூப் குழு, இதைத் தயாரித்துள்ளது.
தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா (தெலங்கானா), கர்நாடகா என ஒவ்வொரு மாநிலத்தின் பெருமைகளை அடுக்குவதோடு, நாங்கள் அனைவரும் தென்னிந்தியர்கள் என்ற ஒற்றுமைக் குரலை உறுதியுடன் சொல்கிறது, இந்தக் காணொலிக் காட்சி. இதன் வரிகளும் இசையும் படத் தொகுப்பும் மிகவும் சுவையாக அமைந்துள்ளன. திராவிட நாடு கோரிக்கையாளர்கள் பார்த்தால், இதைத் தேசிய கீதமாகவே அறிவித்துவிடுவார்கள்.
பார்த்தும் கேட்டும் மகிழ வேண்டிய காணொலி இங்கே: