கரூர் - எடையளவு சட்டத்தின் கீழ் 29 நகைக்கடைகள் மீது நடவடிக்கை

கரூர் - எடையளவு சட்டத்தின் கீழ் 29 நகைக்கடைகள் மீது நடவடிக்கை

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சமிப நாட்களாக குறைந்துவருகிறது. மக்களும் நகைக்கடைகளை படையெடுத்து கொண்டு வருகின்றனர். அப்படி நிலவரம் இருக்க, நம்ம  ஊரு நகைக்கடைகளில்  ஒரு 29 கடைகள்   எடையளவு சட்டத்தின் கீழ் தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்ட கதையை கேளுங்க

கட்ந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் தொழிலாளர் துறை  ஆய்வாளர் த. கிருஷ்ணமூர்த்தி, ஆய்வாளர் ந. ராகவன், உதவி ஆய்வாளர்கள் ந. செல்வராஜ், வெ. குமரக்கண்ணன் ஆகியோர் கரூர் மாவட்ட நகைக்கடைகளில் எடையளவு சட்டத்தின் கீழ் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில்  எடையளவு சட்டத்தின் கீழ் 32 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 29 நிறுவனங்கள் அரசு அங்கிகரித்த எடை கற்கள் பயன்படுத்தாமல் போலியான எடை கற்கள் இருத்ததை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நம்ம ஊரு மக்களுக்கு சொல்லும் எச்சரிக்கை என்னன்னா, கடைக்கு போனோம் கண்ண மூடிட்டு வாங்கினோம் அப்டின்னு இல்லாம கொஞ்சம் இதெல்லாம் கவனத்தில் கொண்டால் சரி..

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்