இஸ்ரேலில் பந்து தாக்கி நடுவர் மரணம்
இஸ்ரேலில் பந்து தாக்கி நடுவர் மரணம்
ஆஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் பவுன்சர் பந்து தலையில் தாக்கி மரணம் அடைந்த சம்பவம் ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்க்ளையும், வீரர்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவம் நடைபெற்று நான்கு நாட்களே ஆன நிலையில், இஸ்ரேலில் லீக் போட்டியில் நடுவராக பணியாற்றிய ஹில்லல் ஆச்கர் என்ற நடுவர் பந்து தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- இஸ்ரேல் நாட்டில் உள்ள அஸ்டோட் நகரில் தேசிய கிரிக்கெட் ‘லீக்’ போட்டி நடந்தது. இந்த போட்டி ஒன்றில் 55 வயதான ஹில்லல் ஆஸ்கர் நடுவராக பணியாற்றினார்.பேட்ஸ்மேன் அடித்த பந்து அவரை நோக்கி வந்தது. அதில் இருந்து அவர் தப்பிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. பந்து அவரது தாடையை தாக்கியது. இதில் பலத்த காயத்துடன் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.
மரணம் அடைந்த ஹில்லல் ஆஸ்கர் சர்வதேச நடுவர் ஆவார். ஐரோப்பிய சாம்பியன் போட்டிகளில் நடுவராக பணியாற்றி இருக்கிறார். இஸ்ரேல் அணிக்கு கேப்டனாக இருந்து உள்ளார்.ஆஸ்கரின் மரணத்துக்கு இஸ்ரேல் கிரிக்கெட் சங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது.