கரூர் : மாட்டு வண்டியில் மணல் அள்ளியதர்க்கு கைது மற்றும் பறிமுதல்

கரூர் : மாட்டு வண்டியில் மணல் அள்ளியதர்க்கு கைது மற்றும் பறிமுதல்

கடந்த வாரம், வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையிலான குழு புகழூர் நான்கு ரோடு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மாட்டுவண்டியில் தோட்டக்குறிச்சி பகுதிக்கு காவேரி ஆற்றுப் பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்த புகழூர் ஹைஸ்கூல் மேட்டைச் சேர்ந்த கந்தசாமி மகன் ரவி (33) என்பவர் கைது செய்யப்பட்டு, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல் வேலாயுதம்பாளையம் காவல் துணை ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான குழு தோட்டக்குறிச்சி பகுதியில்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை நிறுத்தி அனுமதி சீட்டு கேட்டபோது புகழூர் ஹைஸ்கூல் மேட்டைச் சேர்ந்த பழனிச்சாமி (45) என்பவர் அனுமதி சீட்டு இல்லாமல் காவேரி ஆற்றுப் பகுதியில் மணல் அள்ளி வந்ததாக தெரிவித்தார். அதன் பேரில் பழனிச்சாமியை கைது செய்து, மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாயிற்று பிழைப்புக்கு மாட்டு வண்டியில் வந்து மணல் அள்ளினால் குற்றம், ஆனால் உரிமம் பெற்று கல்லாவை நிரப்பும் கட்சிக்காரர்களும் கழகங்களும் செய்தல் நியாயம். என்ன விந்தையான உலகம்.

http://i.ytimg.com/vi/Wn883-57ztw/0.jpg

மணல் அள்ளுவதை எந்த நிலையிலும் நியப்படுதவில்லை... மணல் அள்ளுவதை என் தாயின் மீது கால் வைத்து நசுக்குவதற்கு சமம் என்று நினைக்கிறோம். ஆயினும் மாட்டு வண்டியில் அள்ளுவதற்கும் பெரிய பெரிய இயந்திரம் வைத்து  சரக்கு வண்டிகளில் அள்ளுவதற்கும் நிரம்ப வேறுபாடு உண்டு. இவன் சோற்றுக்கு அள்ளுகிறான், அவன் சேத்துவைக்க அள்ளுகிறான்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்