கரூர் புகழூரில் நெகிழிப் பைகளுக்கு தடை
வேலாயுதம்பாளையம்:புன்செய் புகழுர் ஊராட்சி பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், நெகிழிப் பைகள் மற்றும் பொருட்கள் விற்பனை 40 மைக்ரான் அளவிற்கு குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யவும், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விதிமுறை மீறினால், விற்பனையாளர்களுக்கு முதல் முறை, 250 ரூபாய், இரண்டாவது முறை, 500 ரூபாய், மூன்றாவது முறை, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்யப்படும், என புன்செய் புகழுர் டவுன் பஞ்சாயத்து தலைவர் லலிதா மற்றும் செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் கூறியுள்ளனர்.
நல்ல செயல் நாமும் வாழ்த்தி ஆதரவளிப்போம்...........