கரூரில் விளம்பர பதாகைகள் அகற்றம்- கரூரின் மைய்யம் மகிழ்ச்சி அடைந்தது

கரூரில் விளம்பர பதாகைகள் அகற்றம்- கரூரின் மைய்யம் மகிழ்ச்சி அடைந்தது

நம்ம கரூர்ல, பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றியும் ஒரே விளம்பர பலகைகளாக கண்ணுக்கு தெரிஞ்சிகிட்டு இருந்திச்சு. இதனால பேருந்து நிலையமே கண்ணுக்கு தெரியாம அந்த பலகைகளுக்கு பின்னாடி தான் மறைஞ்சு  இருந்தது.  இப்ப கதையே மாறி பேருந்து நிலையம் நல்ல தெளிவாக காட்சி அளிக்கிறது. தகவல்  என்னனு தெரிஞ்சிக்க கிழ படிங்க.

சில மாதங்களுக்கு முன், நம்ம டிராஃபிக் ராமசாமி என்ற சமூக சேவகர், கரூரில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்த போது, பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர் வைத்திருந்த மிகப்பெரிய விளம்பர பலகையை தைரியமாக கிழித்தெறிந்து அதற்க்கு எதிராக தன நிலைபாட்டை உணர்த்தினார்.

இப்ப சில நாட்களுக்கு முன், கரூர் ஆட்சியாளர் ஜெயந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில், பொதுமக்களுக்கு இடையூறாக, நகரில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கப்படக் கூடாது. அப்படி இருந்தால், அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு வந்தது. அதன்படி, கரூர் நகரம் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் படிப்படியாக அகற்றப்பட்டது. தற்போது, பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்த விளம்பர பலகை அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன.

அந்த கண்கொள்ள கட்சியை நீங்களும் பாருங்க

 

 

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்