கரூர்: நேற்று நடந்த வாகன சோதனையில் 53 பேருக்கு அபராதம்

கரூர்: நேற்று நடந்த வாகன சோதனையில் 53 பேருக்கு அபராதம்

நம்ம மாவட்டத்தில் வாகன விபத்துக்களை தடுக்க  நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவலர்கள்  போதாதென்று மாவட்ட காவலர்களும் இணைந்து அந்த பணியை செவ்வனே செய்வதை நீங்களும் நாமும் நன்கு அறிவோம். மாதம் தோறும் விபத்து நடக்கும் இடங்களை எல்லாம் விட்டுவிட்டு நகரத்தின் முக்கியமான இடங்களில் நின்று கொண்டு வாகன சோதனை நடத்தி வருவதை எல்லோரும் கவனித்திருப்போம். இதே போல் நேற்றும் காவலர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனை செய்தனர்.

அப்போது ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது போன்ற பல்வேறு வாகன விதிமீறல்களில் ஈடுபட்ட 53 பேரை பிடித்து அபராதம் விதித்தனர். பின்னர் அனைவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஊருக்குள்ள தொழில் செய்யும் சாதாரண மக்கள் வாழும் பகுதியில், வெறும் 40கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்லக் கூடிய 80அடி சாலை, செங்குந்தபுரம், திண்ணப்பா திரையரங்கம், சுர்ச்முக்கு, இன்னும் இதர சந்து பொந்துகளில் காவலர்கள் தங்கள் சோதனையை தவறாமல் நடத்திக்கொண்டு தான் இருகின்றனர். அது போலவே வாகன விபத்துகளும் தவறாமல் இவர்கள் இல்லாத இடம் பார்த்தே நடகின்றது....

மேலே சொன்ன அந்த 53 பேருக்கும் எங்களின் அழ்ந்த அனுதாபங்கள்....


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்