கரூர்: மணல் வண்டிகளை சிறை பிடித்தனர் மாட்டு வண்டி தொழிலாளர்கள்

கரூர்: மணல் வண்டிகளை சிறை பிடித்தனர் மாட்டு வண்டி தொழிலாளர்கள்

கரூர் அருகேயுள்ள நன்னியம்புதூரைச் சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் நெரூர் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளி வந்து ஊருக்குள் விற்பனை செய்பவர்கள்.

இந்நிலையில் அவர்கள் மாட்டு வண்டியில் அள்ளி வந்து சரக்கு வண்டிகளில் ஏற்றி வெளியூர்களுக்கு விற்பனை செய்வதாக மாவட்ட கனிம வளத்துறையினருக்கு தகவல் கிடைத்து, கடந்த மாதம் கனிம வளத்துறையினர்களால் ஆய்வு செய்யபட்டு மாட்டு வண்டி தொழிலாளர்களை மணல் அள்ளக்கூடாது என தடையும் விதிக்கபட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை திடீரென அப்பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் வண்டிகளை சிறைபிடித்து வாங்கல் - மண்மங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வாங்கல் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தொழிலாளர்கள், எங்கள் ஊரிலே மணல் எடுத்து வெளியூர்களுக்கு இவர்கள் விற்கிறார்கள். எங்களுக்கு மணல் எடுக்க அனுமதி கிடையாதா எனக்கூறி வாதிட்டனர்.

பின்னர், இதுதொடர்பாக கோட்டாட்சியரிடம் தெரிவித்து உங்களுக்கு மணல் எடுக்க அனுமதி வாங்கித் தரப்படும் என உறுதியளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

மணல் அள்ளுவதே தவறு.. ஆயினும் சட்டம் சொந்த மண் சார்ந்தவரிகளின் பிழைப்பை நசித்து எவனோ ஒருவன் வந்து மணல் அல்ல அனுமதிக்கிறது.

சட்டம், இல்லாதவனையும் இயலாதவனையும் தான் சீண்டிக்கொண்டிருக்கிறது... ஒருவனின் உரிமையை பறித்து இன்னொருவனிடம் குடுக்கும் வேலயை தான் சட்டம் இயற்றுபவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்