2015 நிதிநிலை அறிக்கை விவரங்கள்
============================================================================================
போக்குவரத்து படிக்கான வரி விலக்கு ரூ.800 லிருந்து ரூ.1600 ஆக உயர்த்தப்படுகிறது.
பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு.
யோகா வகுப்புகளுக்கு சேவை வரி நீக்கம்.
==================================================================================================
ரூ.1 லட்சத்துக்கு மேல் பொருள் வாங்குபவர்களுக்கு பான் கார்டு அவசியம்.
ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு கூடுதலாக 2 சதவீதம் வரி.
வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை.
பினாமி பெயரில் சொத்து சேர்ப்பதைத் தடுக்க சட்டம்.
வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை.
வெளிநாடுகளில் பதுக்கப்படும் பணத்தின் அளவில் 300 சதவீதம் அபராதம்
தனிநபர்களுக்கான வருமான வரிவிலக்கில் மாற்றம் இல்லை.
வரி தவிர்ப்பு தடுப்பு விதிமுறையான GARR மேலும் 2 ஆண்டுகள் ஒத்திவைப்பு.
சேவை வரி 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்கு வரி விலக்கு 25 ஆயிரமாக உயர்வு
==================================================================================================
ராணுவத்துக்கு 2.47 லட்சம் கோடி ஒதுக்கீடு
உலகத்தரத்திலான நிதிசேவை மையம் அமைக்கப்படும்.
கிராம வளர்ச்சிக்கு கூடுதலாக 79, 526 கோடி ஒதுக்கீடு.
கருப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.
நிறுவனங்களுக்கான வரி 25% சதவீதமாக குறைக்கப்படும்.
அடுத்த 4 ஆண்டுகளில் கார்பரேட் வரி 5% குறைக்கப்படும்.
வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்க புதிய சட்டம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.
சுற்றுலா தலங்களில் ஊனமுற்றோருக்கு சிறப்பு வசதி செய்து தரப்படும்.
1 லட்சம் கி.மீட்டர் தொலைவில் புதிய சாலைகள் அமைக்கப்படும்.
அமிர்தசரஸில் முதுநிலை தோட்டக்கலைக் கல்லூரி அமைக்கப்படும்.
பினாமி பெயரில் சொத்து சேர்ப்பதைத் தடுக்க சட்டம்.
வரி ஏய்ப்பு செய்வோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.
கல்வி, மதிய உணவு திட்டத்திற்கு 85,968 கோடி ஒதுக்கீடு.
==================================================================================================
ஜாலியன் வாலாபாக் உள்ளிட்ட இடங்கள் சர்வதேச சுற்றுலா தளங்களாக பராமரிக்கப்படும்.
சுற்றுச்சூழலை மாசு படுத்தாத வாகனங்கள் 70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான மருத்துவமனை கொண்டுவரப்படும்.
காஷ்மீர், பஞ்சாப், தமிழகம் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனம் அமைக்கப்படும்.
கர்நாடகாவில் ஐஐடி நிறுவப்படும்.
கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தகுதியை மேம்படுத்த திட்டம்.
டிஜிட்டல் இந்தியா சேவை மூலம் 2.50 லட்சம் கிராமங்களுக்கு இணைதள வசதிகள் செய்யப்படும்.
==================================================================================================
100 நாள் வேலை திட்டங்களுக்கு கூடுதலாக 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
தொழிலாளர் வைப்பு நிதிக்கான விதிமுறைகள் மாற்றம் செய்யப்படும்.
காகித பண பரிவர்த்தனையை குறைக்க திட்டம்.
பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா திட்டத்திற்கு கூடுதலாக 1000 கோடி ஒதுக்கப்படும்.
தங்கத்திற்கான ஆவண வடிவ முதலீடு ஊக்குவிக்கப்படும்.
டெபிட் மற்றும் கிரடிட் கார்டு பரிவர்த்தனை அதிகரிக்கப்படும்.
அசோக சக்கரம் பொறிக்கப்பட்டு தங்க நாணயம் விற்ப்பனை செய்யப்படும்.
கருப்பண புழக்கத்தை குறைக்க நேரடி பண பரிமாற்ற முறை குறைக்கப்படும்.
சுற்றுலா தளங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் செய்து தரப்படும்.
==================================================================================================
நடப்பு ஆண்டில் உட்கட்டமைப்பை மேம்படுத்த 70 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
சிறுபான்மையினருக்காக நபி மஞ்சில் என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படும்.
5 மிகப்பெரிய மின் திட்டங்கள் தொடங்கப்படும்.
கூடங்குளம் அணுமின் திட்டத்தின் 2 ஆவது அலகு அடுத்த ஆண்டு முதல் செயல்படும்.
குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு 15 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
==================================================================================================
தகவல் தொழில்நுட்பத்துறையில் புதிய நிறுவனங்கள் தொடங்க 1 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
மென்பொருள் துறையில் வேலைவாய்ப்பு உருவாக்க திட்டம் வகுக்கப்படும்.
100 நாள் வேலைவாய்ப்பு திட்டங்களுக்கு ரூ.34,699 கோடி ஒதுக்கீடு
புதிய தொழில் தொடங்கும் விதிமுறைகள் எளிமையாக்கப்படும்.
===============================================================================================
12 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை விபத்துக் காப்பீட்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
சாலை மற்றும் ரயில்வே திட்டங்களுக்கு நிதி அதிகரிக்கப்படும்.
80 வயதுக்கு மேற்பட்டோர் 1 லட்சம் கோடி பேர் உள்ளனர். ஜன் தன் திட்டத்தின் கீழ் அனைத்து மக்களின் துயரும் துடைக்கப்படும்.
எஸ்.சி./எஸ்.டி. தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க முக்கியத்துவம் அளிக்கப்படும்.
பிரதமரின் ஜீவன் ஜோதி பீமா திட்டம் கொண்டுவரப்படும். அதற்கு 330 ரூபாய் ப்ரீயம் நிர்ணயிக்கப்படும்.
நேரடி மானியத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
கிராம உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
நாட்டின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த 75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
==================================================================================================
நபார்டு வங்கி மூலம் 15 ஆயிரம் கோடி சிறு,குறு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும்.
புதிய விபத்துக் காப்பீட்டு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
முத்ரா வங்கி மூலம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு தொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.
மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நிதி வருவாயில் 62 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.
மின்சாரம், தூய்மையான குடிநீருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
100 நாள் வேலைத்திட்டம் தொடரும். இதற்கு 34,699 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆண்டுக்கு 12 ரூபாய் ப்ரீமியத்தில் 2 லட்சம் ரூபாய் விபத்துக் காப்பீடு திட்டம் அறிமுகம்.
அடல் பென்சன் திட்டம் உருவாக்கப்படும். இதன் மூலம் 60 வயதுக்கு மேற்பட்டோர் பலனடைவர்.
==================================================================================================
=============================================================================================