சச்சின் ரசிகர் சுதிர்குமார் சவுத்ரியை மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்த ஆஸ்திரேலிய அதிகாரிகள்

சச்சின் ரசிகர் சுதிர்குமார் சவுத்ரியை மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்த ஆஸ்திரேலிய அதிகாரிகள்

சச்சின் ரசிகர் சுதிர்குமார் சவுத்ரியை மைதானத்திற்குள் அனுமதிக்க மறுத்த ஆஸ்திரேலிய அதிகாரிகள்

கொடிக்கம்பு உயரமாக இருந்தது காரணமாக சச்சின் தெண்டுல்கரின் ரசிகர் சுதிர்குமார் சவுத்ரியை மைதானத்திற்கு அனுமதிக்க ஆஸ்திரேலியா அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

சுதிர் குமார் சவுத்ரி.. இப்படி பெயரை மட்டும் குறிப்பிட்டால், யாரோ ஒருவர் என்று அனைவரும் கடந்து சென்று விட வாய்ப்புண்டு. ஆனால் இந்திய கிரிக்கெட் அணி மோதும் எந்த ஒரு மைதானத்திலும் இவரை காண முடியும். தொலைக்காட்சியில் இந்திய அணி மோதும் காட்சிகளை காணும் ரசிகர்கள் எவராக இருந்தாலும் இவரைப் பார்க்காமல் இருக்க வாய்ப்பே இல்லை. ‘உடல் முழுவதும் மூவர்ண கொடியின் வண்ணங்களை பூசிக்கொண்டு, தெண்டுல்கரின் டீசர்ட்டில் உள்ள நம்பர் 10–ஐ உடலில் எழுதியிருப்பவர்’ என்று கூறினால் இவரைப் பற்றி பலரும்.. ‘ஓ.. அவரா?’ என்று நினைவுப்படுத்திக் கொள்வார்கள். அந்த அளவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் மீதும், தெண்டுல்கரின் மீதும் அதீத பற்று கொண்டவர்.

இதுவரை சுமார் 250–க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் இவர் இதே பாணியில், இந்திய அணி மோதும் மைதானங்களில் வலம் வந்துள்ளார். இந்திய கிரிக்கெட் விளையாட்டின் மீது தனக்கு ஆர்வம் வருவதற்கு, சச்சின் தெண்டுல்கரே காரணம் என்று சுதிர்குமார் சவுத்ரி கூறியவர். சுதிர்குமார் சவுத்ரி, பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர் நகரைச் சேர்ந்தவர்.  தற்போது கோலாகலமாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியினருக்கு ஆதரவாக  மைதானங்களில் வலம் வர, சுதிர்குமாருக்கு சச்சின் தெண்டுல்கர் உதவி செய்துள்ளார். இதற்காக தெண்டுல்கர் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி, ஆஸ்திரேலிய தூதரகத்திற்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்தே அவருக்கு வீசா கிடைத்தது.

இந்நிலையில் கொடிக்கம்பு உயரமாக இருந்தது காரணமாக சச்சின் தெண்டுல்கரின் ரசிகர் சுதிர்குமார் சவுத்ரியை மைதானத்திற்கு அனுமதிக்க ஆஸ்திரேலியா அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

சுதிர்குமார் சவுத்ரி வைத்திருக்கும், தேசிய கொடிக்கம்பு உயரமாக இருப்பதில் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரி அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம் அசோஸியேஷன் மைதானத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையேயான போட்டி நடைபெற்றது. போட்டியை ஆவலுடன் காண சுதிர்குமார் சவுத்ரி அமர்ந்திருந்தார். அப்போது அவரை மைதானத்திற்கு வெளியே இழுத்துவந்த பாதுகாப்பு அதிகாரி ரெனால்ட்ஸ், சவுத்ரியின் கையில் வைத்திருந்த கொடிக்கம்பு உயரமாக இருப்பதாகவும், இதனால் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுமென்றும், அதனை ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆனால் சவுத்ரி கொடுக்க மறுத்துவிட்டார்.
 
“அனைத்து போட்டிகளிலும் நான் இந்த கொடியுடனே வந்தேன். இந்த மைதானத்தில் ஐக்கிய அரபுக்கு எதிராக நடந்த போட்டியில் கூட நான் இந்தக் கொடியைதான் கொண்டு வந்தேன். அப்போது யாரும் என்னை தடுக்கவில்லை, இப்போது ஏன் தடுக்கிறீர்கள்?. நான் எந்தஒரு பிரச்சனையையும் உருவாக்க மாட்டேன். இந்திய வீரர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு என்னை நன்றாகத் தெரியும். அவர்களிடம் வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள் நான் எந்த பிரச்சனையும் செய்யமாட்டேன். என்னை உள்ளே செல்ல அனுமதியுங்கள், என்று சவுத்ரி கெஞ்சி உள்ளார். பின்னர் ஆட்டம் தொடங்கப் போகும் நேரம் நெருங்கியதும், கொடிக்கம்பை உபயோகப்படுத்த மாட்டேன் என்று சொல்லி விட்டு அவசர அவசரமாக போட்டியை காண சென்றுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரி ரெனால்ட்ஸ் பேசுகையில், சவுத்ரி மைதானத்துக்கு உள்ளே கொடியுடன் வரும் போது தன்னை தடுக்கும் அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு வேறு வழியாக வந்துவிடுகிறார். இப்போது உபயோகப்படுத்த மாட்டேன் என்று சொல்லி விட்டு போகிறார், ஆனால் உறுதியாக சொல்கிறேன் அவர் சற்று நேரத்தில் மைதானத்தில் எங்கையோ ஒரூ மூலையில் இருந்து கொடியை அசைப்பார். நான் அவர் ஆர்வத்தை கெடுக்கவில்லை. பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. என்று கூறினார்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்