ஒரு வைடுபால் போட்டீங்களா? கதறிய இங்கிலாந்து!!!

ஒரு வைடுபால் போட்டீங்களா? கதறிய இங்கிலாந்து!!!

ஒரு வைடுபால் போட்டீங்களா? கதறிய இங்கிலாந்து!!!


இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது வங்கதேச அணியை சேர்ந்த பந்துவீச்சாளர்கள் 47வது ஓவர் வரை ஒரு நோபால், ஒரு வைடு பால் கூட வீசவில்லை.

அடிலய்டில் நடந்த இந்த போட்டியில் முதலில் விளையாடிய வங்க தேச அணி 275 ரன்கள் எடுத்தது. அடுத்து இங்கிலாந்து அணி பேட் செய்யத் தொடங்கியது. வங்கதேச அணி வீரர்கள் மிக நேர்த்தியாக பந்து வீசினார்கள். வைடு, நோ பால்களை வங்க தேச பந்துவீச்சாளர்கள் 47வது ஓவர் வரை வீசவில்லை.

இவ்வளவு கட்டுகோப்பாக பந்து வீசிய காரணத்தினால்தான் வங்கதேச அணியால் இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்த முடிந்தது. இந்த போட்டியை பொறுத்தவரை எக்ஸ்ட்ரா ரன் என்ற வகையில் இங்கிலாந்து அணிக்கு 2 லெக்பைஸ மட்டுமே கிடைத்தது. தொடர்ந்து 47.4வது ஓவரில்தான் இங்கிலாந்து அணிக்கு ஒரு நோபால் கிடைத்தது.

மற்றபடி தேவையில்லாமல் ஒரு ரன் கூட வங்கதேசம் விட்டுக் கொடுக்கவில்லை. இதுவும் கூட வங்க தேச அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. அதேவேளையில் இங்கிலாந்து அணி 8 வைடுபால்களையும் 1 நோபாலும் வீசியது.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்