சதத்தை தவறவிட்ட டிவில்லியர்ஸ் உலக கோப்பையில் புதிய சாதனை படைத்தார்
சதத்தை தவறவிட்ட டிவில்லியர்ஸ் உலக கோப்பையில் புதிய சாதனை படைத்தார்
உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் சதத்தை தவறவிட்டார்.
உலக கோப்பை கிரிக்கெட்டில் வெலிங்டனில் இன்று நடக்கும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா–ஐக்கிய அரபு எமிரேட்ஸ்அணிகள் மோதி வருகிறது. ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தென்ஆப்பிரிக்கா, ஆசிய அணிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் உதை வாங்கியது. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளை எளிதில் தோற்கடித்தது. 6 புள்ளிகளுடன் உள்ள தென்ஆப்பிரிக்கா இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று கால்இறுதியை உறுதி செய்யும் முனைப்புடன் களமிறங்கி உள்ளது. போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரவு எமிரேட்சு அணி பீல்டிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. பெரும் வலிமைவாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியின் 3 விக்கெட்களை தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்சு எடுத்துவிட்டது. தொடக்க ஆட்டக்காரர் அம்லா 12 ரன்களில் அவுட் ஆனார். காக் 26 ரன்களிலும், ரிலீ ரோசவ் 43 ரன்களிலும் அவுட் ஆனார். தொடக்க ஆட்டக்காரர்கள் வரிசையாக நடையை கட்டியதை அடுத்து, டிவில்லியர்ஸ் மற்றும் மில்லர் பொறுப்பாக ஆடி அணிக்கு ரன் சேர்த்தனர். இருவரும் தென் ஆப்பிரிக்காவை வலிமையான நிலைக்கு கொண்டு சென்றனர். தென் ஆப்பிரிக்கா 34 ஓவர்களுக்கு, 3 விக்கெட்களை இழந்து 192 ரன்கள் எடுத்திருந்த போது, டிவில்லியர்ஸ் 53 ரன்களுடனும்(3 பவுண்டரிகள், ஒரு சிக்சர்), மில்லர் 43 ரன்களுடனும் விளையாடினர்.
இருவரும் தங்களது நேர்த்தியான ஆட்டம் மூலம் அணிக்கு ரன்சேர்த்தனர். ஆனால் ஜோடியால் நிலையாக நின்று ஆட முடியவில்லை. மில்லர் 49 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து களமிறங்கிய டுமினியும் அதிகப்பட்சமாக ரன்எதுவும் அடிக்கவில்லை என்றாலும், தனது பங்கிற்கு 23 ரன்கள் அடித்து கொடுத்தார். 42.2 வது ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் ஆட்டம் இழந்தார். சதம் அடிக்க ஒரு ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் 99 ரன்களில் அவுட் ஆகி தென் ஆப்பிரிக்கா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். 99 ரன்கள் அடித்திருந்தபோது ஜாதேவ் பந்துவீச்சில் அவுட் ஆனார். இன்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சு அணியின் பந்துவீச்சும் குறிப்பிடத்தக்க வகையில் நேர்த்தியாக இருந்தது.
இதனையடுத்து களமிறங்கிய பெகருதீன் தென் ஆப்பிரிக்காவின் ரன்கணக்கை அதிரடியாக உயர செய்தார். 31 பந்துகளை எதிர்க்கொண்ட மெகரூதீன் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என மொத்தம் 64 ரன்கள் எடுத்து இறுதியில் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பிலாண்டர் 10 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 341 ரன்கள் குவித்து, ஐக்கிய அரபு எமிரெட்சுக்கு 342 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்து உள்ளது.
தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் இன்றைய போட்டியில் புதிய சாதனையை படைத்தார். இந்த உலக கோப்பையில் இதுவரையில் மட்டும் 20 சிக்சர்கள் விளாசியுள்ளார். உலக கோப்பையில் அதிக சிச்சர் அடித்தவர் என்ற பெருமையை டிவில்லியர்ஸ் தட்டிச்சென்றார். கடந்த 2007 உலக கோப்பையில் ஹைடன் அடித்த 18 சிக்சரே இதுவரையில் ஒருவீரர் அதிகம் அடித்த சிக்சர் என்று இருந்தது. தற்போது டிவில்லியர்ஸ் அதனை முறியடித்து காட்டியுள்ளார்.