கரூரை சுற்றி வளைக்கும் கொள்ளை கும்பல்

கரூரை சுற்றி வளைக்கும் கொள்ளை கும்பல்

நம்ம கரூர்: வெங்கமேடு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், 65 பவுன் நகை வரை கொள்ளையடித்த கும்பல், தற்போது, பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்ககுட்பட்ட பகுதியில், தொடர்ந்து வித்தை காட்டி வருகின்றனர்.

கரூர் நகரை சுற்றி கரூர், வெங்கமேடு, பசுபதிபாளையம் என காவல் நிலையம் அமைந்துள்ளன. வெங்கமேடு காவல் நிலையத்திர்க்கு உட்பட்ட பகுதியில், சமீபத்தில், 62 பவுன் நகை, 3.5 லட்சம் ரூபாய் திருடப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக, பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில், கொள்ளை கும்பல் கைவரிசை காட்டி வருகிறது. சில நாட்களுக்கு முன், புலியூரில் ஒரு வீட்டில், 15 பவுன் நகை திருடப்பட்டது. நேற்று, பசுபதிபாளையம் காவலர்க்கு சவால் விடும் வகையில், பட்டப்பகலில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

கரூர் அருகே, செல்லாண்டிபாளையம் பகவதியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பழனியம்மாள், 45, இவரது மகள் ராஜேஸ்வரி, 24, மருமகன் காளிதாஸ், 28, இவர்கள் அரிசி கடை வைத்துள்ளனர். மூவரும், வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டனர். நேற்று மதியம், 2 மணிக்கு சாப்பாட்டுக்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, 2 கிராம் தங்கக் காசு மற்றும் பித்தளை பாத்திரங்கள், 15 ஆயிரம் ரூபாய் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. தகவல் அறிந்த பசுபதிபாளையம் காவலர்கள் விசாரித்தனர். முதலில் வெங்கமேடு பகுதியில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல், தற்போது பசுபதிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து வித்தை காட்டி வருகின்றனர்.

இவர்களின் எல்லையை மேலும் விரிவுபடுத்துவதற்கு முன்பே கட்டுபடுத்தினால் நல்லது. கரூர் மக்கள் கொஞ்சம் சூதானமாக இருக்க பணிக்கிறோம்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்