நடைபாதை வியாபாரிகளுக்கும் நகராட்சிக்கும் முரண்பாடு

நடைபாதை வியாபாரிகளுக்கும் நகராட்சிக்கும் முரண்பாடு

கரூர் சர்ச் முக்கு பகுதியில் இருந்து ரயில்வே நிலையம் செல்லும் சாலையில் உள்ளது ரத்தினம் சாலை. இந்த சாலையில், தினமும் இப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடந்த ஓரா ண்டாக மாலை 4 முதல் இரவு 8மணி வரை காய்கறி கடை வைத்து நடத்தி வருகின்றனர். நேற்றும்(16/03/2015) வழக்கம் போல, காய்கறி வியாபாரிகள் கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தனர்.  அப்போது, மாலை 6மணியளவில், நகராட்சியின் குப்பை லாரியில் குப்பையுடன் வந்த ஊழியர்கள், இந்த இடத்தில் குப்பை கொட்டப்படவுள்ளதாக கூறினர். இதனால், ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் ரத்தினம் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் பாதித்தது.

இந்த மறியல் போராட்டத்தால், ரயில்வே நிலை யம், வாங்கல், நெரூர் போ ன்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும், பிற வாகனங்களும் வரிசை கட்டி நின்றன. சம்பவ இடத்துக்கு கரூர் டவுன் போலீசார் விரைந்து, பொதுமக்களி டம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதோடு, நகராட்சி அலுவலகத்தில் வைத்து பேசிக் கொள் ளலாம் என கூறியதையடுத்து அனை வரும் கலந்து சென்றனர். இதனால், இப்பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்