மைய அரசின் அலுவலகங்களில் இனி மாட்டு மூத்திரம் தான்

மைய அரசின் அலுவலகங்களில் இனி மாட்டு மூத்திரம் தான்

நாடு முழுவதுமுள்ள மைய அரசு அலுவலகங்களில் மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து, மைய அரசின் பெண்கள் மற்றும்  குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தியின் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:-
 
நாடு முழுவதுமுள்ள மைய அரசு அலுவலகங்களில் தூய்மைப் பணிகளுக்கு பினாயில் மற்றும் இதர வேதிப்பொருளுக்குப் பதிலாக பசு மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும். பசுமாட்டு மூத்திரத்தில் கிருமிநாசினி உள்ளதால் இவற்றை காலங்காலமாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
 
பசுமாட்டு மூத்திரத்தில் உள்ள மருத்துவ குணத்தைக் கருத்தில் கொண்டு பசுக்களை காப்பாற்றும் நோக்கில் மாட்டு மூத்திரத்தை அனைத்து மைய அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக பினாயில் மற்றும் திரவ வேதிப் பொருளுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்துவது மேலானது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மேனகா காந்தி கூறியதாவது:-
 
முதலில் டெல்லியில் உள்ள மைய அரசு அலுவலகங்களில் பினாயிலுக்கு பதிலாக பசுவின் மூத்திரத்தைப் பயன்படுத்தினால் பசுக்களும் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படும். பசுக்கள் எப்போதுமே மதிப்புக்குரியவை ஆகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்