எங்கள் இனத்தவரை இந்தியா மரியாதையாக நடத்தவில்லை - ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த மும்பை இந்தியர்

எங்கள் இனத்தவரை இந்தியா மரியாதையாக நடத்தவில்லை - ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த மும்பை இந்தியர்

எங்கள் இனத்தை சேர்ந்தவர்களை இந்தியா மரியாதையாக நடத்தவில்லை. எனவே, இந்தியாவிற்கு திருப்பி வரப்போவது இல்லை என ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்த வாலிபர் கூறியுள்ளார்.
 
சென்ற ஆண்டு மே மாதம் மும்பையின் கல்யாண் பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள், சுற்றுலா செல்வதாக வீட்டில் கூறிவிட்டு ஈராக் சென்று ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்துவிட்டனர். பின்னர் அவர்கள் தங்கள் குடும்பத்தினருடனோ, வேறு யாருடனோ தொடர்பு வைத்துக்கொள்ளவில்லை.
 
இந்நிலையில் 4 பேரில் ஒருவரான ஷேக் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் போன் மற்றும் ஸ்கைப் மூலம் தொடர்புகொண்டு பேசி வருகிறார். தற்போது அவர் சிரியாவின் ரக்கா பகுதியில் உள்ளார். இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பினர் ஷேக்கின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து அவருடன் பேசி உள்ளனர்.
 
அப்போது ஷேக், அவர் அங்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதனால் இந்தியாவுக்கு திரும்ப வரப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் தங்களது இனத்தை சேர்ந்தவர்களை இந்தியா மரியாதையாக நடத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.
 
இது மிகவும் வருத்தமான மற்றும் ஆபத்தான சூல்நிலை. இனம் என்பது மதம் சார்ந்து இல்லை என்பதை எல்லாரும் புரிந்துகொள்ளவேண்டும். இந்த மண்ணில் ஒரு சகோதரன் இம்மாதிரி நினத்ததற்க்கு இந்த சமூகம் வருத்தபடவேண்டும்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்