கரூர்: குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி

கரூர்: குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணி

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட்டு, உரம் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பேரூராட்சிகளில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை மருதூர் பேரூராட்சியில் மண்புழு உரம், தயாரித்து அதனை பேரூராட்சி நிர்வாகம் விற்பனை செய்கிறது.
 
இதேபோல் மாவட்டத்தில் 11 பேரூராட்சிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திடக்கழிவு மூலம் உரங்கள் தயாரிப்பதற்காக பேரூராட்சி தலைவர்கள் மற்றும் முன்னணி விவசாயிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பேரூராட்சி பகுதிகளில் சேரும் குப்பைகளை ஒருங்கிணைத்து மக்கும் பொருளாக மாற்றி அதன் மூலம் மண்புழு உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் பேரூராட்சி பகுதிகளும் தூய்மையடைகின்றன.
 
கரூர் மாவட்டத்திற்குட்பட்ட 11 பேருராட்சியிலும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் மூலம் மண்புழு உரம் தயாரித்து இயற்கை முறை விவசாயத்தை கடைபிடித்து நல்ல மகசூலைப்பெற வழிவகை செய்யப்படும். மேலும் அனைத்து பேரூராட்சிகளிலும் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வினை பேரூராட்சித் துறையின் மூலம் அவ்வப்போது ஏற்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு குப்பைகளை உடனுக்குடன் அகற்றி அதை மண்புழு உரம் தயாரிக்க பணிகள் மேற்கொள்ளும்போது ஊரகப் பகுதியும் தூய்மையாவதுடன் முழுமையான சுகாதாரம் பேணப்படுகிறது. திடக்கழிவு மூலம் உரம் தயாரிப்பது மட்டுமின்றி சமையல் எரிவாயுவும் தயாரிக்கலாம். இதனால் தேவைகளை அதிகளவில் பூர்த்தி செய்வதுடன் பேரூராட்சிகளின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும். எந்த அளவுக்கு பயிற்சி திறனை வளர்த்துக்கொள்ளவதில் தான் இதன்வெற்றி அமையும்.
 
சமூக அக்கறை சார்ந்த தொழில் புரிய விரும்பும் இளைஞர்கள் பேரூராட்சியை தொடர்பு கொண்டு உங்களின் வாழ்விடத்தில் இது போன்று தொழில் செய்யலாம். அதனால் நாட்டுக்கும் வீட்டுக்கும் சிறப்பு சேரும்.... சிந்தியுங்கள்...!

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்