தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ இனி செல்லாது

தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ இனி செல்லாது

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் கருத்துக்களின் அடிப்படையில் காவல் துறைக்கு கைது செய்ய அதிகாரமளிக்கும்  தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவு 66 ஏ-வை ரத்து செய்து உச்சநீதிமன்றம் 24.3.2015 அன்று தீர்ப்பளித்துள்ளது. 2000-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இச்சட்டப் பிரிவில் சில திருத்தங்கள் 2009-ம் ஆண்டில் சேர்க்கப்பட்டன.
 
இதன்படி பிறரை புண்படுத்தினார், பகை உணர்வை தூண்டினார் என்று யாரையும் கைது செய்து சிறையில் அடைக்கலாம். அப்படி அடைத்தும் இருக்கிறார்கள். 
 
“இந்த 66 ஏ பிரிவு சரியாக வரையறுக்கப்படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். உச்சநீதிமன்ற உத்திரவை வரவேற்கிறேன்” என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார். 
 
பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களில் ஒருவருக்கு எதிராக அவதூறான கருத்துகள் இடம்பெற்றால், அதனால் பாதிக்கப்பட்டவர் குற்றவியல் நீதிமன்றத்தை அணுகலாம். இந்திய தண் டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 200-ன்படி அவர் மான நஷ்ட வழக்கு தொடரலாம். இந்த சட்டப்பிரிவுகளே போதுமானதாக உள்ளதால், மக்களை மிரட்டும் 69ஏ தேவையற்றதே.
 
இந்தத் தீர்ப்பின் மூலம், இணைய கருத்து .உரிமை கட்டிக்காக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவதூறுக் கருத்துக்களை வெளியிடாமல் இணையச் சுதந்திரத்தைச் செவ்வனே பயன்படுத்துவதும், அதைத் தவறாக பயன்படுத்தாமல் இருப்பதும் மட்டுமே உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பெருமைப்படுத்துவதாக அமையும்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்