சிரியாவின் 4வயது சிறுமி புகைபடக்கருவியை துப்பாக்கி என நினைத்து சரணடைந்த காட்சி
சிரியாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி, கேமராவைப் பார்த்து அது துப்பாக்கி என நினைத்து தனது கையைத் தூக்கியபடி பயந்துபோய் நின்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு போரால் சீர்குலைந்து போயுள்ள சிரியாவைச் சேர்ந்த 4 வயது சிறுமி ஆதி ஹுதியா என்பவரை உஸ்மான் சாகிர்லி என்ற புகைப்படக் கலைஞர் கடந்த 2012 ஆம் ஆண்டு பார்த்துள்ளார். சிறுமியை பார்த்த உஸ்மான் அவரை புகைப்படம் எடுக்க கேமராவை எடுத்துள்ளார்.
அந்த கேமராவைப் பார்த்த சிறுமி அது துப்பாக்கி என நினைத்து பயத்தில் நடுங்கி கைகளை மேலே தூக்கி சரண் அடைந்து நின்றுள்ளார். இந்த புகைப்படத்தை பாலஸ்தீனத்தைச் சேர்ந்த புகைப்பட பத்திரிக்கையாளர் நாதிய அபு ஷபான் என்பவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நாதியா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
"அவர் கேமரா அல்ல ஆயுதம் வைத்திருக்கிறார் என நினைத்து சிறுமி சரண் அடைந்துவிட்டார்" என்று தெரிவித்துள்ளார். இந்த டுவீட்டை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீடுவீட் செய்துள்ளனர். மேலும் பலர் இந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் போட்டுள்ளனர். பயந்து நிடுங்கி நிற்கும் சிறுமியின் புகைப்படம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உலகம் எதை சாதிக்க போய்க் கொண்டிருக்கின்றது என்பதே புரியவில்லை...!