இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு. காய்கறிகளின் விலை கூட உயரலாம்

இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு. காய்கறிகளின் விலை கூட உயரலாம்

தமிழகத்திலுள்ள சில சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு இன்று (ஏப்ரல் 1) முதல் நடைமுறைக்கு வந்தது.
 
தமிழகத்தில் 41 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 29 சுங்கச் சாவடிகளில் தனியாரும், 12 சுங்கச் சாவடிகளில் தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் கட்டணம் வசூலிக்கின்றன.
 
ஒவ்வொரு நிதியாண்டு தொடக்கத்திலும் 10 சதவீத கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதன்படி, தமிழகத்தில் சூரப்பட்டு, வானகரம், பரனூர், ஆத்தூர், கிருஷ்ணகிரி, சாலைப்புதூர், பள்ளிகொண்டா, வாணியம்பாடி, எட்டூர் வட்டம், கப்பலூர், நாங்குநேரி, புதுக்கோட்டை, சிட்டம்பட்டி பூதக்குடி, லெம்பலாக்குடி, லஷ்மணப்பட்டி, ஸ்ரீபெரும்புதூர், சென்னசமுத்திரம் ஆகிய 18 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி, மகிழுந்துக் கட்டணம் ரூ.38 லிருந்து ரூ.44 ஆகவும், சரக்கு வண்டி ரூ.139 -ல் இருந்து ரூ.155 ஆகவும் உயர்த்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஆயினும் கருரை சுற்றி சுங்கச்சாவடி ஏதும் வராமல் பார்துக்கொள்ள வேணும். கடந்த பெப்ரவரி மாதம் எப்படியோ கரூர்- கோவை தேசிய நெடுஞ்சாலையில், தென்னிலை அருகே அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை எதிர்த்து, பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர் சங்கம் போராட்டம் நடத்தி கட்டணம் வசூலிக்கும் உத்தரவு ரத்து செய்ய வைத்தனர். அதனால் கரூர் எம்.பி.,யும்., நாடாளாமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை, மறு உத்தரவு வரும் வரை பணிகள் செய்யக் கூடாது, என்றும் ஏலம் எடுத்தவரை எச்சரித்து சென்றார்.

இதே போல் கவனமாக இருக்க வேண்டும் மக்களே....!


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்