கரூர்: ரயில்நிலைய நூலைவுச்சீட்டு உயர்வானதற்க்கு மாற்று வழி

கரூர்: ரயில்நிலைய நூலைவுச்சீட்டு உயர்வானதற்க்கு மாற்று வழி

கரூர் :   கரூர் மாவட்ட ரயில் பயணிகளுக்கு முக்கிய வேண்டுகோள் என்று கரூர் மாவட்ட ரயில் பயணிகள் நலச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில், ஏப்ரல் 1ம்தேதி முதல் நுழைவுக் கட்டணச்சீட்டு ரூ.5 என்பது ரூ.10 ஆக உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே, நுழைவுக் கட்டணம் ரூ.2, ரூ.3 என இருந்தது. ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது. தற்போது புதியதாக பொறுப்பேற்ற மத்திய அரசு திடீரென ரூ. 5 என்பதை ரூ.10 ஆக உயர்த்தியுள்ளது.

புதிய அரசின் நிதி அறிக்கையில் புதிய ரயில்களும் இல்லை. புதிய கட்டண உயர்வும் இல்லை என அறிவித்தது. தற்போது முன்னுக்கு பின் முரணாக ரயிலே வராத நிலையத்திலும் நுழைவுக் கட்டணம் ரூ.10  அறிவித்துள்ளது மிகவும் கண்டித்தக்கது.  பயணிகள் ரயில்வே அமைச்சத்திற்கு பாடம் புகட்டும் வகையில் குறைந்த பட்ச ரயில் பயணச்சீட்டு ரூ.5 பெற்று நுழைய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நுழைவுச்சீட்டு 2 மணி நேரம் மட்டுமே செல்லும். குறைந்த பட்ச பயணச்சீட்டு ஒரு நாள் முழுவதும் செல்லும். எனவே இந்த முறையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நல்ல தான் யோசிக்கராங்க...!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்