காவிரியில் மணல் அள்ளுவதில் விதி மீறல் - நடவடிக்கை எடுக்க ஆட்சியாளருக்கு உத்தரவு
கரூர் : நம்ம கிருஷ்ணராயபுரம், பொய்கைபுதூரை சேர்ந்த ரவி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியது, கிருஷ்ணராயபுரம் காவிரி ஆற்றில் 60 ஏக்கர் பரப்பளவில் 3 வருடங்களுக்கு மணல் அள்ள தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் துறை ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. ஏற்கனவே கிருஷ்ணயராயபுரம் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக நீர்வள ஆதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது போன்ற நிலையில் ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க கூடாது என ஆட்சியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித் தோம். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அனுமதிக்கப்பட்ட அளவை விட, கனரக மண்வாரி இயந்திரங்களை பயன்படுத்தி இரவு பகலாக மணல் அள்ளுகின்றனர். மதுரை மேலூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு இங்கிருந்து தான் தண்ணீர் எடுக்கப்படுகிறது. இந்த பகுதியில் தொடர்ந்து மணல் அள்ள அனுமதித் தால் விவசாய தேவையும், குடிநீர் திட்டங்களும் பாதிக்கும். எனவே மணல் அள்ள தடை விதித் தும், மணல் அள்ளக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஜி.சொக்கலிங்கம் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கரூர் மாவட்ட ஆட்சியாளர் மனுதாரரின் மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்திரவிட்டுள்ளனர்.
என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பாப்போம்.....