வஞ்சி வாசிகளுக்கு தெரிவிப்பது என்னவென்றால் - நம்ம மாரியம்மன் கோவில் திருவிழா மே 10 துடங்குகிறது
நம்ம மாரியம்மன் கோவில் திருவிழா நிகழ்ச்சி நிரல் அட்டவணை கிழே
மே, 10ம் தேதி மாலை, 6 மணி முதல் இரவு, 9.15 மணிக்குள் கம்பம் நடுதல்.
மே, 17ம் தேதி மாலை, 6.15 மணிக்கு காப்பு கட்டுதல்.
18ம் தேதி காலை, 7.15 மணிக்கு பல்லக்கு இரவு, 7.15 மணிக்கு புலிவாகன புறப்பாடு.
19ம் தேதி காலை, 7.15 மணிக்கு பல்லக்கும், இரவு, 7.15 மணிக்கு பூதவாகன புறப்பாடு.
20ம் தேதி இரவு, 7.15 மணிக்கு சிம்மவாகனம்.
21ம் தேதி இரவு, 7.15 மணிக்கு அன்னவாகனம்.
22ம் தேதி இரவு, 7.15 மணிக்கு சேசவாகனம் புறப்பாடு நடக்கிறது.
மே, 23ம்தேதி இரவு, 7.15 மணிக்கு யானை வாகனம்.
24ம் தேதி மாலை, 6.45 மணிக்கு குதிரை வாகனம்.
25ம் தேதி காலை, 7.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
மே, 26ம் தேதி இரவு, 7 மணிக்கு கெசலட்சுமி வாகன புறப்பாடு நடக்கிறது.
27ம் தேதி மாலை, 5.15 மணிக்கு கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்ச்சி நடக்கிறது.அதன்பின், மலர் வாகனம், மயில்வாகனம், கிளிவாகனம், வேப்பமர வாகனம், பின்ன மர வாகனம், மற்றும் மலர்அலங்காரம், பஞ்சபிரகாரம், மலர் பல்லக்கு, மாரியம்மன் பல்லக்கு, ஊஞ்சல் ஏற்றுதல், அம்மன் குடிபுகுதலுடன் விழா நிறைவு பெறுகிறது.இதற்கான ஏற்பாடுகளை, கரூர் மாரியம்மன் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.