ஊழல் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு: சென்னையில் மீண்டும் பரபரப்பு

ஊழல் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியல் வெளியீடு: சென்னையில் மீண்டும் பரபரப்பு

தமிழக அரசின் ரூபாய் 10 ஆயிரம் கோடி ஊழல் என்ற தலைப்பில், ஐஏஎஸ் அதிகாரிகளின் படத்துடன் கூடிய  விளம்பர பாதகை  சென்னையில் வைக்கப்பட்டுள்ளது.
  
கடந்த சில நாட்களாக, தமிழகத்தில் ஊழல் செய்த அதிகாரிகளை விளம்பர பாதகை வைத்து உலகத்திற்கு அம்பலப்படுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
 
இதன் முதல் கட்டமாக, கடந்த வாரம் பொதுப்பணித்துறையில் லஞ்சம் வாங்கிய ஊழல் அதிகாரிகள் பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில், ரூபாய் 10000 கோடி ஊழல் சிக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் என்ற தலைப்பில் அதிகாரிகள் புகைப்படத்துடன் பாதகை வைக்கப்பட்டுள்ளது.
 
சென்னை, குரேம்பேட்டையில், சாலையின் ஓரத்தில் பொதுமக்கள் பார்வையில்படும்படி ஒரு பாதகை மக்கள் செய்தி மையம் என்ற அமைப்பு சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
 
அதில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஞானதேசிகன், ராமமோகன் ராவ், ஹன்ஸ்ராஜ்வர்மா, அதுல் ஆனந்த், குமரகுருபரன், சபீதா, உதயசந்திரன், சவுண்டையா, வெங்டேசன், கார்த்திக் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
 
மேலும், இதே போன்ற ஒரு பாதகை தாம்பரம் - இரும்புலியூர் தேசிய நெடுஞ்சாலையிலும் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த பதாகையை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். இந்த தகவல் காவல்துறை தலைமைக்கும், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
 
இதனால், தமிழகத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்