கரூர்: ஒரே நாளில் 4 இடங்களில் இருசக்கர வாகனங்கள் களவு

கரூர்: ஒரே நாளில் 4 இடங்களில் இருசக்கர வாகனங்கள் களவு

கரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (14/05/15) யன்று மட்டும் நான்கு இடங்களில் இரு சக்கர வாகனங்கள் திருட்டுப் போயுள்ளது.

கரூர்-கோவை சாலை பகுதி: கரூர் சின்ன தாராபுரத்தைச் சேர்ந்த காப்பீடு முகவர் மல்லேஸ்வரன் கண்ணன் பல்பொருள் அங்காடி முன் செவ்வாய்க்கிழமை தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி பூட்டிவிட்டு கடைக்குச் உள்ளே சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது, அவரது இரு சக்கர வாகனத்தைக் காணவில்லையாம்.

இதேபோல, கரூர் ஆண்டாங்கோவிலைச் சேர்ந்த அப்ரசா பேகம்(43) என்பவரும் தனது வண்டியை கரூர்-கோவை சாலையில் உள்ள உணவகம் ஒன்றின் அருகே நிறுத்தி விட்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்த போது, அவரது வண்டி மாயம்.

கரூர் பேருந்து நிலைய வளைவு (ரவுன்டானா) பகுதி: கரூர் எல்.ஜி.பி நகரைச் சேர்ந்த சண்முக சுந்தரம்(33)என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை கரூர் பேருந்து நிலைய வளைவு அருகே நிறுத்தி விட்டு சென்ற தனது இரு சக்கர வாகனத்தைக் காணவில்லை.

கரூர் ஜவஹர் கடைவீதி பகுதி: பனிக்கம்பட்டியைச் சேர்ந்த சுதன் (35) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தை கரூர் கடைவீதியில் நிறுத்தி விட்டு, துணிக்கடைக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வாகனம் காணவில்லை.

இதில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், கரூர் நகரின் காவல் நிலையத்திற்கு காவல் ஆய்வாளர் இல்லை. வெங்கமேடு ஆய்வாளர் தான் இங்கும் அங்கும் சேர்த்து பணிசெய்கிறார். நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றால் அழைக்கழிக்கப் படுவது தான் மிச்சம்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்