மாசு திரைப்படம் வெளியிடு - அதிகம் கட்டணமா ! புகார் குடுங்க பரிசு பெருங்க
தமிழ் சினிமாவின் வியாபார சீரழிவுக்கு பெரிதும் காரணமாக இருப்பது திரையரங்கு கட்டணக் கொள்ளை. புதுப்படங்கள் வெளியாகும் போது மட்டுமின்றி சாதாரண தினங்களிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்திலிருந்து பல மடங்கு அதிகம் திரையரங்குகள் வசூலிக்கின்றன. அதனால் பொதுமக்கள் திரையரங்குகளுக்கு செல்வதைத் தவிர்த்து திருட்டு படத்தகடுகளை நாடுகின்றனர்.
இந்த நேரடி பாதிப்பு மட்டுமின்றி திரைத்துறையின் அனைத்து சீரழிவுக்கும் இந்த கட்டண கொள்ளையே அடிப்படை காரணமாக உள்ளது. உதாரணமாக லிங்கா பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். படம் வசூலிக்கவில்லை என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும். ஆனால், அவர்கள் சொல்லும் அளவுக்கு நட்டம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எப்படி நிரூபிப்பது? டிக்கெட் கட்டணத்தை மட்டும் வசூலித்திருந்தால், டிக்கெட் விற்பனையை வைத்து கண்டுபிடிக்கலாம். ஒரு டிக்கெட்டுக்கு பத்து மடங்கு விலை வைத்து விற்பனை செய்ததால் தயாரிப்பாளர் தரப்பால் லிங்காவின் உண்மையான வசூலை கணக்கிட முடியவில்லை. திணறுகிறார்கள். இதில் எவ்வளவு கருப்பு பணம் அடங்கும் என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலித்தால் அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் செய்யுங்கள், உதவ நாங்கள் இருக்கிறோம், பரிசும் தருகிறோம் என லஞ்ச ஒழிப்பு மற்றும் குற்றபிரிவு அமைப்பு (ஆன்டி கரெப்ஷன் அண்ட் க்ரைம்) முன்வந்துள்ளது. இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை தான் மேலே கொடுக்கப்பட்டுள்ள படம்.
இதில் சென்னை திரை அரங்குகளின் பட்டியலுடன் பிற மாவட்டங்கள் குறித்த விலை நிர்ணய அளவுகளும் உள்ளது. சிந்திக்கும் மக்கள் கொஞ்சம் சிரத்தை எடுங்கள்.