இந்த மாதம் இயற்கை நமக்கு கொடுக்கும் வரம் - ஒரு விநாடி

இந்த மாதம் இயற்கை நமக்கு கொடுக்கும் வரம் - ஒரு விநாடி

இந்த ஆண்டு ஜுன் மாதம் 30ம் தேதி வழக்கத்தை விட ஒரு விநாடி கூடுதலாக இருக்கும் . அணுவியல் நேரம் எப்போதும் மாறாத இயல்பு உடையது. ஆனால் பூமி ஒவ்வொரு நாளும் ஒரு நொடியில் இரண்டாயிரத்தில் ஒரு பங்கு தாமதமாக சுழல்கிறது. சுழற்சியில் ஏற்படும் தாமதத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த ஆண்டு ஜுன் 30ல் ஒரு விநாடி நேரத்தை சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.
 
அதாவது, ஜுன் 30ம் தேதி நள்ளிரவு 11:59:59 க்கு கூடுதலாக ஒரு விநாடி சேர்க்கப்பட்டு, சர்வதேச நேரம் 11:59:60 என்று இருக்கும். 
 
1972ல் தான் முதன் முதலாக மிகுவிநாடி (Leap Second) சேர்க்கப்பட்டது. இந்த ஆண்டு 26 வது முறையாக வரும் ஜுன் 30ம் தேதி நள்ளிரவு ஒரு மிகுவிநாடி சேர்க்கப்படுகிறது. 
 
ஒரு நாள் போதவில்லை என்று குறை கொள்ளும் மக்களுக்கு இயற்கை கொடுத்த வரம் இந்த ஒரு நொடி. அனுபவியுங்கள் !
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்