தலை கவசம் அணியாத 300 நபர்கள் கரூரில் சிக்கினர்

தலை கவசம் அணியாத 300 நபர்கள் கரூரில் சிக்கினர்

தமிழகத்தில் கட்டாய தலைகவசம் ஜூலை 1ம்தேதி (நேற்று) முதல் அமலுக்கு வந்தது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸிநிர்மல்குமார் உத்தரவின்பேரில் கரூர் லைட்ஹவுஸ், பேருந்துநிலையம், திருக்காம்புலியூர் ரவுண்டானா, சர்ச்முக்கு, ஜவகர் கடைவீதி ஆகிய இடங்களில் காவலர்கள் சோதனை நடத்தினர். தலைகவசம் அணியாமல் வந்தவர்களை நிறுத்தி ரூ.100அபராதம் விதித்தனர். முதல் நாள் என்பதால் அபராதம், நாளை (இன்று) முதல் தலைகவசம் அணியாமல் சென்றால் வாகனங்களின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படும். வாகனங்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு நீதிமன்றஉத்தரவின்பேரில் தான் திரும்ப ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

தலை கவசம் அணிவது தொடர்பாக மக்களிடம் எரிச்சல் சிந்தனை அதிகம் உள்ளது. இப்போது இந்த சட்டவரைமுறை சில நெருக்கடிகளை தருகிறது. இதில் முக்கியமான விடயம் பின்னால் வருபவரும் தலைகவசம் அணிய வேண்டும் என்று சொல்கிறது. இந்த சட்டம் மக்களை காக்க வருகிறதோ இல்லையோ, போக்குவரத்து காவலர்களுக்கு வரத்து குறையாமல் பார்த்துகொள்ளும்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்