சாயாக்களிவுகளால் சாவுகிறது அமராவதி

சாயாக்களிவுகளால் சாவுகிறது அமராவதி

" சாயாக்களிவுகளால் சாவுகிறது அமராவதி " இந்த தலைப்பு நாகரீகம் இல்லாததாக இருக்கலாம், ஆயினும் எனக்கு இப்படி சொல்வதை தவிர வேறுமாரி சொல்ல தெரியவில்லை. 

கேரள மாநிலம், மேற்கு தொடர்ச்சி மலை மூணாறு, தமிழகத்தின் ஆனைமலை பகுதிகளில் இருந்து அமராவதி ஆறு உற்பத்தியாகிறது. 193 கி.மீ., தூரம் பயணித்து, கரூர் அருகே திருமுக்கூடலூரில், காவிரியில் இணைக்கிறது. கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றை நம்பி, 20 பஞ்சாயத்துகளை சேர்ந்த லட்கணக்கான மக்கள் மற்றும் விவசாயிகள் உள்ளனர்.

வரலாறும், புவியியல் சிறப்பும் சொல்லி என்ன பயன். வலியும் வேதனையும் தான் மிஞ்சும். 

கரூர் மாவட்டத்தில் சுக்காழியூர், சின்ன ஆண்டாங்கோவில், திருமாநிலையூர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட சாயக்கழிவுகளால், அமராவதி ஆற்று நீரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இருந்து நொய்யல் ஆறு, வேலாயுதம்பாளையம் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. நொய்யல் சாயக்கழிவால், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில், தற்போது, 64 சாயப்பட்டறைகள் செயல்படுகிறது. சாயப்பட்டறைகளுக்கான பதிவு காலம், இம்மாதத்துடன் சில பட்டறைகளும், செப்டம்பர் மாதத்தில் சில பட்டறைகளுக்கும் நிறைவு பெறுகிறது. சாயப்பட்டறைகளுக்கு உரிமம் மீண்டும் புதுப்பிக்கும் போது, காவிரி, அமராவதி ஆறுகளுக்கு, ஐந்து கி.மீ.,க்கு தூரம் தள்ளி அனுமதி வழங்க வேண்டும். மேலும், தற்போதுள்ள சாயப்பட்டறைகளில் இருந்து, 25 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு அனுமதி வாங்கி விட்டு, நான்கு லட்சம் முதல், ஐந்து லட்சம் லிட்டர் வரை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதற்க்கு என்ன செய்வது என்று ஒன்றுமே தெரியவில்லை. இது குறித்து விவசாய அமைப்புகள் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்க்கும் விடை தெரிந்தபாடில்லை.

இது போதாதென்று, கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியில் செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவு நீர், இரட்டை வாய்க்காலில் வெளியேற்றப்பட்டு, அமராவதி ஆற்றில் கலக்கப்படுகிறது. 

இப்படி காசுக்காக மண்ணையும் தண்ணியையும் விசமாக்கும் விசமிகளை எப்படி தான் இந்த மண்ணு தாங்கிட்டு இருக்கோ !!!?


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்