சைக்கிளுக்கு தாவும் வாகன ஓட்டிகள்

சைக்கிளுக்கு தாவும் வாகன ஓட்டிகள்

தலைகவசம் தலைவலி தருவதால் கரூரில் மக்கள் பெரும்பாலானோர் சைக்கிளை நாடுகின்றனர். கரூர் மாவட்டத்தில் ஜூலை 1ம்தேதி முதல் தலைகவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தரமான கவசம் கிடைக்காமலும், கூடுதல் செலவு செய்தும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். மேலும் தலைகவசம் அணிந்து வண்டி ஓட்டுபவர்கள் பக்கவாட்டில் வாகனம் வருவது தெரியாமல் தடுமாறுகின்றனர். ஓரமாக செல்வதில்லை. கழுத்துவலி, முதுகுவலியால் பாதிக்கப்பட்டவர்கள், கழுத்துக்குபெல்ட் அணிபவர்கள், வேலைக்கு சென்றுவருவதற்கு சிரமப்படுகின்றனர். தலைகவசம் அணிவதால் பெரும்பிரச்னை ஏற்படுகிறது.

ஆனாலும் தலைகவசம் போடாமல் வருபவர்களிடம் காவலர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து அபராதம் விதிக்கப்படுகிறது. முக்கிய பகுதிகளில் குறிப்பாக பேருந்துநிலையம், கடைவீதிகளில் காவலர்கள் சோதனையை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். இதனால் சைக்கிளை நாட தொடங்கி விட்டனர். காற்று பலமாக வீசியதால் சைக்கிள் ஓட்ட முடியாத நிலைமை இருந்தது. தற்போது காற்று சற்று ஓய்ந்திருப்பதால் சைக்கிளில் செல்ல தொடங்கி விட்டனர். வீடுஅருகே உள்ள கடைவீதி, அங்காடி, பேருந்துநிலைய பகுதிகளுக்கு சைக்கிளை பயன்படுத்துகின்றனர். வெளியூர்களில் இருந்து பல்வேறு வேலை நிமித்தமாக வருபவர்கள் முன்பு நண்பர்களின் வண்டியை வாங்கி ஓட்டிவந்தனர். தலைகவச தொல்லையில் இருந்து விடுபட அருகில் உள்ள இடங்களுக்கு சைக்கிளில் செல்கின்றனர். பல்வேறு வேலைநிமித்தமாக கரூருக்கு வேலைக்காக விற்பனை பிரதிநிதிகள், நிறுவன பிரதிநிதிகள் வருகின்றனர். இவர்கள் வாடகை சைக்கிளை பயன்படுத்துகின்றனர். அருகில் உள்ள நெசவு உற்பத்தி அங்காடிகளில், கொசுவலை, பேருந்து கட்டுமான நிறுவனங்களுக்கு தொழில்நிமித்தமாக செல்ல வாடகை சைக்கிளை பயன்படுத்துவது அதிகரிக்கிறது.

ஒருமணிநேரத்திற்கு ரூ.7 கட்டணம், நாள் வாடகை ரூ.20 என நிர்ணயிக்கப்பட்டு சைக்கிள் வாடகை வசூலிக்கப்படுகிறது. சைக்கிளை பொறுத்தும் எடுக்கும் மணி அளவை பொறுத்தும் வாடகை தொகை இருக்கிறது.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்