அலைபேசி நிறுவன கொள்ளையில் இருந்து தப்பிக்க ஒரு அற்புதவழி
இன்றய உலகில் செல்போன் இல்லாத நபர்களே இல்லை என்றாகிவிட்டது. ஆனால், சிலர் பின்கட்டண முறை அல்லது முன்கட்டண திட்டத்தில் இருப்பார்கள்.
ஆனால், அலைபேசி வைத்திருக்கும் அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சினை என்ற வென்றால், அது தேவை இல்லாத சேவைகளை நிறுவனங்கள் நம்மை அறியாமல் முடுக்கிவிட்டு (Activate) பணம் பறிப்பது. இந்த கொள்ளையில் சிக்கி மீளமுடியாமல் பலர் சிக்கித் தவித்து வருகின்றனர். இதோ அந்த சிக்கலில் இருந்து விடுதலை பெற எளிதான வழி உள்ளது.
அலைபேசி நிறுவனங்கள் வழங்கும் சேவை முடுக்கிவிடும் சேவைகளுக்கு VAS (Value Added Services) என்று பெயர். இது போன்ற பிரச்சினை எந்த நிறுவனமாக இருந்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.
உங்கள் செல்போனில் இருந்து 155223 என்ற எண்ணுக்கு அழைத்தால் நீங்கள் எந்த Service Activate செய்து உள்ளீர்களோ அதை Cancel செய்து விடலாம். இதை அழைப்புக் கட்டணம் எதுவும் கிடையாது.
நீங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு கொண்டு முறைப்பாடு(Complaint) செய்தால் உங்கள் பணம் திரும்பக் கொடுக்கப்பட்டுவிடும். 24 மணி நேரத்திற்குப் பின்பு தொடர்பு செய்தால் சேவை மட்டும் ரத்து செய்யப்படும். நீங்கள் முடுக்கிவிட்ட சேவைகளை இதில் ரத்து செய்ய உரிமை வழங்கப்பட்டுள்ளது.