வரும் 15ஆம் தேதி முதல் நெகிழிப் பொருட்கள் விற்றால் அபராதம்

வரும் 15ஆம் தேதி முதல் நெகிழிப் பொருட்கள் விற்றால் அபராதம்

நெகிழிப் பொருட்கள் இல்லாத பேரூராட்சி குறித்த விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு கூட்டம் 7/08/2015 அன்று ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் ஜெயந்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகிறது. எனவே 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள நெகிழிப் பைகள், கோப்பைகள் உள்பட பொருட்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பொது மக்களாகிய நாம்நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட மறுக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும்.

எனவே முதல் கட்டமாக பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகள் அனைத்திலும் நெகிழிப் பொருட்கள் விற்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் பிளாட்டிக் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று பொதுமக்களாகிய நாம் கடைக்கு செல்லும் போது வீட்டில் இருந்து பைகள் எடுத்து செல்ல வேண்டும். அந்த பைகளில் பொருட்கள் வாங்கி வரவேண்டும். கடைக்காரர்கள், பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டு கொடுத்தால் பிளாஸ்டிக் பையில் போடப்பட்டுள்ள பொருட்கள் வேண்டாம் என்று அவர்களிடம் எடுத்து கூற வேண்டும்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நம் பெற்றோர் கடைக்கு செல்லும் போது கையில் தவறாமல் ஒரு மஞ்ச பையை எடுத்து செல்வார். ஆனால் தற்போது நாகரீகம் என்ற பெயரில் கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போது வெறும் கையோடு சென்று கடைக்காரர் கொடுக்கும் நெகிழிப் பைகளில் பொருட்களை வாங்கி வருகிறோம். எனவே முதல் கட்டமாக நாம் நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதை கைவிட வேண்டும். தொடர்ந்து நம் நண்பர்கள், நமது உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என அனைவரிடமும் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் எடுத்து கூறி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கடைகளில் அதிக அளவு நெகிழிப் பைகள் பயன்படுத்தப்படுகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போன்று பள்ளி ஆசிரியர்கள் இளைய தலைமுறையான மாணவர்களிடம் நெகிழிப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன்படி முதல் கட்டமாக பேரூராட்சி பகுதிகளில் வருகிற 10–ந் தேதிக்குள் நெகிழிப் பொருட்கள் விற்பதை நிறுத்த வேண்டும். அதன் பிறகு நெகிழிப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் முதல் முறையாக எச்சரிக்கை விடப்படும். 2–வது தடவை நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் மேலும் 15–ந் தேதிக்கு மேல் பேரூராட்சி பகுதிகளில் நெகிழிப் பொருட்கள் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து கூறினார்.

முன்னதாக கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அலுவலர்கள் உள்பட அனைவருக்கும் இலவச பையை ஆட்சியர் வழங்கினார். மேலும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு பேரூராட்சி சார்பில் இலவசமாக பை வழங்கப்படும். இந்த பையை கடைக்கு எடுத்து சென்று பொருட்களை வாங்கி வர வேண்டும். நெகிழிப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.

நல்ல ஏற்பாடு... மக்கள் ஆகிய நாம் சிறிதேனும் ஆதரவு தருவோம்

 

 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்