கோடை மழைக்கே சகதிக்கோலம் கொண்ட காந்திபுரம் முக்கிய சாலை

கோடை மழைக்கே சகதிக்கோலம் கொண்ட காந்திபுரம் முக்கிய சாலை

வெப்பச்சலனத்தால் பெய்த மழைக்கே சேறும், சகதியுமான கரூர்-திருச்சி பிரதான சாலை மற்றும் தெற்கு காந்திகிராமம் முக்கிய சாலை.

கரூர்-திருச்சி பிரதான சாலையில் புலியூர், காந்திகிராமம், திண்ணப்பாநகர், கருப்பகவுண்டன்புதூர், திருமாநிலையூர், தாந்தாணிமலை, ஆட்சியர் அலுவலக சாலை என பல பகுதிகள் உள்ளன. இங்கிருந்து பள்ளி, கல்லூரிகள், சவுளி தொழிலுக்கு என எராளமான மக்கள் சென்று வருகின்றனர்.

ஆனால் இந்த தார் சாலை பலமாதங்களாக மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக உள்ளது . இந்த குண்டும், குழியுமான சாலையில் தான் வாகனங்கள் முட்டி, மோதி கொண்டு சென்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த பகு தியில் வெப்பச்சலனம் காரணமாக இரவில் சிறிதளவு மழை பெய்தது. இந்த மழை நீர் சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி நிற்கிறது. இதனால் தார் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் தட்டு தடுமாறி செல்கின்றனர். சிலர் அதிக அளவு தண்ணீர் கிடக்கும் சாலை பகுதியில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். வெப்பச்சலனத்தால் பெய்த மழைக்கே சேறும் சகதியுமாக மாறி உள்ள இந்த சாலையில் அதிக மழை பெய்தால் என்ன நிலையாகும்?

இது போதாதென்று அங்கு கடைகள் வைத்திருக்கும் மக்களும் தங்களது பங்கிற்கு கழிவு பொருட்களை சாலை மீது தான் கொட்டி வருகின்றனர். இந்த கடைகளில் இருந்து கழிவுநீரையும், கழிவு பொருட்களையும் சேமித்து வைத்து கடை மூடும் நேரத்தில் சாலையில் கொட்டுகின்றனர்.

நகராட்சியும் மக்களும் சேர்ந்து நம்மூரை சேதம் செய்தால் தாங்காதப்ப நமது கரூர்


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்