ஆந்திர அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை எலி கடித்து சாவு

ஆந்திர அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை எலி கடித்து சாவு

ஆந்திர அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை எலி கடித்து சாவு

 

ஆந்திர மாநிலம் விஜயவாடா மாவட்டம் கிருஷ்ணா லங்கா கிராமத்தை சேர்ந்தவர் நாகா. இவரது மனைவி லட்சுமி.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லட்சுமிக்கு கடந்த 17–ந்தேதி அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சிறுநீரகத்தில் பாதிப்பு உள்ளது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினார்கள்.

இதையடுத்து நாகா– லட்சுமி தம்பதிகள் குழந்தையை குண்டூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு 19–ந் தேதி ஆபரேஷன் செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் தொட்டிலில் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நள்ளிரவு எலி ஒன்று குழந்தையின் கைகளை கடித்தது. இதனால் குழந்தை அலறி துடித்தது. எலி கடித்ததால் குழந்தைக்கு காயம் ஏற்பட்டதை கண்ட தாய் அதுபற்றி டாக்டர் மற்றும் நர்சிடம் தெரிவித்தார். ஆனால், நர்சுகள் அதனை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் மறுநாள் எலி குழந்தையின் கை, கால், முகம், மார்பு ஆகியவற்றை கடித்து குதறியது. இதில் குழந்தை பரிதாபமாக இறந்தது.

இதனால் தாய் லட்சுமி அதிர்ச்சி அடைந்தார். டாக்டர் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்ததாக வாக்குவாதம் செய்தார். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. லட்சுமிக்கு ஆதரவாக மற்ற நோயாளிகளின் உறவினர்களும் டாக்டர்களிடம் தகராறு செய்தனர்.

ஆஸ்பத்திரியில் எலித்தொல்லை இருப்பதை நிர்வாகம் கண்டு கொள்வது இல்லை என்று புகார் தெரிவித்தனர்.

எலி கடித்து பச்சிளம் குழந்தை இறந்ததை கேள்விப்பட்ட முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு அதிர்ச்சி அடைந்தார். கவனக்குறைவாக செயல்பட்டதாக மருத்துவமனையின் ஆர்.எம்.ஒ. மற்றும் 2 அதிகாரிகளை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். மேலும் பலியான குழந்தையின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கவும் உத்தரவிட்டார்.

இதற்கிடையே இந்த சம்பத்தை கேள்விப்பட்ட மனித உரிமை கமிஷன் தானே முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இது குறித்து 11–ந் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி குண்டூர் மருத்துவமனை சூப்பிரண்டுக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்