ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருவார்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருவார்

இலங்கை தொடர்பில் போர்க்குற்ற அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படும் முன்னர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் இலங்கைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேரவையின் 30வது அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 14ஆம் திகதி முதல் ஒக்டோபர் 2ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில் ஹுசைன், தமது அலுவலகம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் நேரடியாக கையளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த செய்தியும் திகதியும் உறுதி செய்யப்படவில்லை. 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்