இலங்கைக்கு வராகா ரோந்து கப்பலை பரிசாக வழங்கியது இந்தியா

இலங்கைக்கு வராகா ரோந்து கப்பலை பரிசாக வழங்கியது இந்தியா

இலங்கைக்கு குத்தகை அடிப்படையில் சேவையாற்றி வந்த இந்திய கடலோர கப்பல் படைக்கு சொந்தமான 'வராகா' ரோந்து கப்பலை, அந்நாட்டிற்கே இந்தியா இலவசமாக வழங்கியது. இந்தியப்பெருங்கடல் பகுதியில் கடல்சார் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்ட இலங்கையின் ஈடுபாட்டை பாராட்டி ரோந்து கப்பல் பரிசாக வழங்கப்பட்டதாக இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கப்பலை வழங்கும் இந்த உடன்படிக்கையில், கொழும்பிலுள்ள இந்திய துாதர் ஒய்.கே.சின்ஹா, இலங்கை பாதுகாப்பு துறை செயலர் பஸ்நாயகே கையெழுத்திட்டனர்.

http://www.defence.lk/img/Indian_Coast_Guard_Ship_Varaha_gifted_to_SL_Navy_20150828_02p8.JPG


இவர்கள் மிகுந்த ஈடுப்பாட்டோடு தடுத்த கடல்சார் குற்றங்கள் என்ன என்று தெரியுமா மக்களே ?

கடந்த 1991 முதல் 2014 வரை 167முறை நமது மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 85 மீனவர்கள் கொல்லப்பட்டது மற்றும் 180 பேருக்கு காயம் ஏற்படுத்தியது. சுமார் 800க்கு அதிகமான மீனவர்களை கைது செய்து பல போராட்டங்கள் பின்பு வீடுவிக்கப்பட்டது.
இந்த வருடம் பிப்ரவரி மாதம் 50 மீனவர்களை கைதுசெய்து அவர்களின் 55 படகுகளை பறிமுதல் செய்துள்ளது.

இந்த சாதனைகளுக்கெல்லாம் மரியாதை செய்ய இந்திய அரசு இந்த ரோந்து கப்பலை பரிசாக கொடுத்து நமது மீனவர்களை மேலும் நசுக்க அருள் புரிந்துள்ளது.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்