எச்சரிக்கை கரூர் வாசிகளே - உலவுகிறது சுத்தமற்ற தண்ணி போத்தல்கள் மற்றும் கெண்டிகள்

எச்சரிக்கை கரூர் வாசிகளே - உலவுகிறது சுத்தமற்ற தண்ணி போத்தல்கள் மற்றும் கெண்டிகள்

கரூர் மாவட்டத்தில் எப்போதுமே கனிம செறிவுட்டபட்ட(மினரல்)  நீருக்கு மவுசு அதிகம் தான். இத்தொழிலில் ஈடுபடுபவர்கள் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். இதனில், பல போலி நீர் செறிவூட்டும் நிறுவனங்கள் வேறு பெருமளவில் முளைத்துள்ளன. கரூரில் ஐ.எஸ்.ஐ., முத்திரை பெற்ற நிறுவனங்கள் மூன்று மட்டுமே உள்ளன. ஆனால், கரூர், அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் போலி நீர் செறிவூட்டும் நிறுவனங்கள் ஐந்துக்கு மேல் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனங்கள் எதிர் ஊடு பரவுதல் (ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ்) எனப்படும் முறையில் நீரை சுத்திகரித்து விற்பனைக்கு அனுப்புகின்றன. இதன் மூலம் குடிநீரில் நுண்ணுயிர்கள், உலோகம், உப்புக்கள் உள்ளிட்ட நல்லது கெட்டது என அனைத்தும் அகற்றப்படுகின்றன.

ஒரு நீர் சுத்திகரிப்பு நிறுவனமானது, செறிவுட்டபட்ட நீர் கெண்டிகளுக்கு(கேன்கள்), ஐ.எஸ்.ஐ., முத்திரை தரச்சான்று பெற்றிருக்க வேண்டும். இதற்கு உரிமக்கட்டணம் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி பெறவேண்டும். பின் நிறுவனங்களில் பரிசோதனை கூடம் அமைத்து சுத்திகரிக்கப் பட்ட குடிநீரை பரிசோதிக்க வேண்டும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஐ.எஸ்.ஐ.,யின் அங்கீகாரம் உள்ள சோதனை கூடத்தில் இங்கு சுத்தம் செய்யப்பட்ட குடிநீரை பரிசோதனைக்கு அனுப்பி சான்று வாங்க வேண்டும். இந்த அறிக்கைகள் மாதந்தோறும் அரசுக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும். ஆனால்கூடம் அமைக்க மற்றும் வல்லுனர்களுக்கு ஊதியம், போன்றவைகளுக்கு ஆகும் செலவை ஒதுக்கி பல நிறுவனங்கள், தரமற்ற ஆலை மூலம் தண்ணீரை சுத்தம் செய்கின்றன. அங்கு சுத்தம் செய்யப்பட்ட குடிநீரை எந்த பரிசோதனையும் செய்யாமல் கெண்டிகளில் அடைத்து விற்பனை செய்கின்றன.

போலி நிறுவனங்கள் கெண்டிகளை முறையாகவும், முழுமையாகவும் சுத்தம் செய்வதில்லை. இதனால், பல்வேறு கிருமிகள் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. சுத்தம் செய்யப்படாத கெண்டிகளில் நிரப்பப்படும் நீரை குடிக்கும் போது நோய் தொற்ற வாய்ப்புள்ளது.  

ஆக மக்களே, நம்ம தண்ணிய வெளிய வாங்கறத விட்டுபுட்டு வீட்ல வர குழா தண்ணிய சுடு பண்ணியோ இல்ல வடிகட்டியோ குடிச்சா. நீ பொலச்ச !


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்