SMS பற்றி தெரியாத வியப்பூட்டும் உண்மைகள்…!!

SMS பற்றி தெரியாத வியப்பூட்டும் உண்மைகள்…!!

SMS பற்றி தெரியாத வியப்பூட்டும் உண்மைகள்…!!

SMS(Short Message Service) பற்றி தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள் என்றே கூறலாம். ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் இதன் பயன்பாடு கொஞ்சம் குறைந்து விட்டது என்று கூறலாம். ஆனாலும் கூட, இதனை ஒரேடியாக குறைத்து விட முடியாது.

ஏனெனில், இன்டர்நெட் பயன்பாட்டு உலகில் வாட்ஸ் அப், வீ சாட், வைபர், டெலகிராம் போன்றவை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கூட, அவசர தேவைகளுக்கு நாம் நாடுவது SMS சேவையைதான். அது மட்டுமின்றி வணிக ரீதியாக இதன் பயன்பாடு அதிகமாகவே உள்ளது.

SMS பற்றி நாம் இதுவரை கேள்விப்படாத சில தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

நெயில் பாப்வார்த் என்பவர் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி ‘Marry Christmas’ என்ற SMS-ஐ அனுப்பினார், முன் முதலில் அனுப்பப்பட்ட SMS இதுதான் குறிப்பிடத்தக்கது.

SMS-ல் 160 வார்த்தைகள் தான் இருக்க வேண்டும் என்பதை கண்டறிந்தவர் ப்ரைடு ஹைல்பிரான்ட், இது அலைவரிசைகளில் SMS –ஐ அனுப்புவதற்கு எளிதாக இருக்கும்.

SMS களை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்டதுதான் ட்விட்டர், டவிட்டரில் 140 வார்த்தைகள் தான் இடம் பெற வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

2010 ஆம் ஆண்டு 360 கோடி பயன்பாட்டாளர்கள் மூலம் உலகில் அதிகம் பேர் பயன்படுத்திய அப்ளிகேஷன் SMS என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் 51 சதவீத பெண்கள் வாழ்த்து அட்டைகளுக்கு பதிலாக SMS அனுப்புவதையே அதிகம் விரும்புகின்றனர்.(ஆனால் நாம Greeting card கொடுக்கலைனாலும் பிரச்சனைதான்)

SMS மூலம் வாக்காளர்களுக்கு பதில் அளித்த முதல் பிரதமர் டோனி ப்ளேர்.

மார்கெல் ஃபெர்னான்டஸ் தான் உலகின் அதிகவேக டெக்ஸ்டர் என்ற பெருமையை கொண்டுள்ளார். பிரிட்டன் மருத்துவர் டேவிட் நாட் SMS -ல் இருந்து கிடைத்த தகவல்களை கொண்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

இந்த விஷயங்களில் சில நமக்கு தெரிந்தவையாக இருக்கலாம். சிலவற்றை முதன்முதலில் இப்பொழுதுதான் கேள்விபட்டிருக்கலாம். இன்னும் தெரியாத விஷயங்களும் இருக்கலாம்.

ஆனால், SMS-ன் பயன்பாடு என்றும் அழியாது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்