கரூர் நகராட்சி மாநகராட்சி ஆகலாம் !

கரூர் நகராட்சி மாநகராட்சி ஆகலாம் !

கரூரில், சவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், பேருந்து கட்டுமான தொழிற்சாலைகள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் என தொழில் வளமிக்க மாவட்டமாக உள்ளது. கரூர் நகராட்சியை, மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்பது நமது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. கடந்த, 2010ல், கரூர் நகராட்சியில், 32 அவைகள்(வார்டுகள்) இருந்தன. கரூர் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தும் வகையில், கடந்த, 2011ல் கரூர் நகராட்சியுடன், இனாம் கரூர், தான்தோன்றி நகராட்சிகள் மற்றும் சணப்பிரட்டி கிராம பஞ்சாயத்துகளை இணைத்து, எல்லைகளை விரிவாக்கம் செய்து, கரூர் நகராட்சியில், 48 அவைகள் அமைக்கப்பட்டன. ஆனால், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படாமல் இருந்தது. கடந்த, 10 ஆண்டுகளாக மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருந்தபோதிலும்,  முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, முயற்சி செய்யவில்லை என்ற குறை சொல்லபடுகிறது. காரணம், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால், மாநகர செயலாளர் மற்றும் புறநகர் செயலாளர் என்றாகி விடும் என்பதால், இதற்கான முயற்சி ஈடுபடவில்லை என கட்சியினர் கருத்தாக உள்ளது.

இந்நிலையில், ஆகஸ்ட், 31ம் தேதி நடந்த கரூர் நகராட்சி அவசர கூட்டத்தில், "ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, ஆத்தூர், காதப்பாறை, பஞ்சமாதேவி, திருமாநிலையூர் (கருப்பம்பாளையம்) ஆகிய ஆறு பஞ்சாயத்துகளை, நகராட்சியுடன் இணைத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்,' என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும், 18ம் தேதி நடக்கும் சட்டசபை மானிய கோரிக்கையின் போது, கரூர் நகராட்சி, மாநகராட்சியாக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

கரூர் நகராட்சியில், கடந்த 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்புபடி, இரண்டு லட்சத்து, 14 ஆயிரத்து, 838 பேர் உள்ளனர். ஆறு பஞ்சாயத்துகளை சேர்க்கும்போது, மக்கள் தொகையின் எண்ணிக்கை, இரண்டு லட்சத்து, 53 ஆயிரமாக உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுத்து, நான்கு ஆண்டுகளாகி விட்டதால், தற்போதைய நிலவரப்படி, மூன்று லட்சம் மக்கள் வரை இருக்கும். இதன் காரணமாக, கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளது.  தமிழக அரசின் மானிய கோரிக்கையின் போது கரூர், ஓசூர், தாம்பரம் ஆகிய மூன்று நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்த வாய்ப்பு உள்ளது.

கேட்க இனிக்கிறது... நடந்தால் சுவைக்கலாம்...


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்