சென்னையில் வேகமாக பரவும் எலிக் காய்ச்சல் : டாக்டர்கள் விளக்கம்

சென்னையில் வேகமாக பரவும் எலிக் காய்ச்சல் : டாக்டர்கள் விளக்கம்

சென்னையில் வேகமாக பரவும் எலிக் காய்ச்சல் : டாக்டர்கள் விளக்கம்

 

சென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொதுமக்களை விதவிதமான காய்ச்சல்கள் வந்து வாட்டி எடுத்தன.

சிக்குன் குனியா காய்ச்சல் பாடாய் படுத்தி எடுத்த பின்னர் எலிக்காய்ச்சல் அனைத்து தரப்பு மக்களையுமே அதிகமாக பாதிப்புக்குள்ளாக்கியது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.

ஒரு சில வீடுகளில் குடும்பத்தில் உள்ள அனைவருமே எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இப்போது வரும் எல்லா காய்ச்சலுமே 3 நாட்கள் வரை இருக்கிறது. சாதாரண காய்ச்சல் என்றால் அதன் பின்னர் குறையத் தொடங்கி நோய் குணமாகி விடும். அதே நேரத்தில், டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சலாக இருந்தால் 3 நாட்களுக்கு பின்னர் அது நீடிக்கும். அந்த வகையில் எலிக் காய்ச்சலும், அது போன்ற பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.

இதுபோன்ற நேரங்களில் கண்டிப்பாக ரத்தப் பரிசோதனை செய்து கொண்டு எந்தவகையான காய்ச்சல் என்பதை கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும் என்றே டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்நிலையில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னையில் எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக குழந்தைகளை எலிக்காய்ச்சல் எளிதாக தாக்குவதாகவும் அது போன்ற நேரங்களில் அவர்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் டாக்டர்கள் கூறினர். அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் எலிக்காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

எலிக்காய்ச்சல் எப்படி பரவுகிறது? அதனை தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி டாக்டர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

வீடுகளில் எலிகளின் நடமாட்டம் தென்பட்டால் உடனே உஷாராகி கொள்வது நல்லது. எலிகளை வீட்டில் இருந்து வெளியில் துரத்தி விட முடியாவிட்டால், எலிப்பொறி மூலமாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

சமையல் அறைகளில்தான் எலிகள் அதிகமாக வந்து தங்கும். அசைவ உணவு வாடையை மோப்பம் பிடித்து எப்படியாவது சமையல் அறைக்குள் எலிகள் புகுந்து விடும். அதற்கான வசதிகளை நாமே ஏற்படுத்திக் கொடுக்கக்கூடாது.

சமையல் அறையில் எலிகள் நடமாட்டம் இருப்பது தெரிந்தால் தண்ணீர் பாத்திரங்களை நன்றாக மூடி வைக்க வேண்டும். சமையல் பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகளையும் மூடிய நிலையிலேயே வைக்க வேண்டும்.

எலியின் சிறுநீர் இவற்றில் பட்டு அப்பொருட்களை கவனிக்காமல் நாம் உட்கொண்டாலே எலிக்காய்ச்சல் பரவி விடும்.

அதேபோல கிணறு, தண்ணீர் தொட்டி போன்றவற்றின் அருகிலும் எலிகள் சென்று விடாத அளவுக்கு பார்த்துக் கொள்ள வேண்டும். இது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கைகளை சாப்பிடுவதற்கு முன்னர் சுத்தப்படுத்தப் பழகி விட்டாலே போதும் எந்தவிதமான காய்ச்சல் உள்ளிட்ட நோய்களும் அண்டாது.

இவ்வாறு அந்த டாக்டர்கள் தெரிவித்தார்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்