சவூதி அரேபியா விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 1.75 கோடி ,காயம்பட்டோருக்கு தலா ரூ 87 லட்சம்
சவூதி அரேபியா மெக்கா நகர் பள்ளிவாசலில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் உயிரிழந்தோரின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ 1.75 கோடி, காயம்பட்டோருக்கு தலா ரூ 87 லட்சம் அளிக்க சவூதி மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களில் 11 இந்தியர்களும் அடங்குவர். மேலும் இறந்தோரின் குடும்பத்திலிருந்து எவரேனும் இருவர் அடுத்த வருடம் ஹஜ்2016-க்கு சவூதி வர விரும்பினால் வந்து செல்லும் முழு செலவையும் சவூதி அரசு ஏற்கும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் காயம்பட்டு இம்முறை ஹஜ் செய்ய இயலாதவர்கள் குணமடைந்த பிறகு ஹஜ் பயணம் வர விரும்பினால் விருந்தாளியாக அவர் வந்து செல்லும் முழு செலவையும் சவூதி அரசு ஏற்கும். தற்போது காயம் பட்டு மருத்துவமனையில் உள்ள நோயாளியை கவனித்துக்கொள்ள அவரின் குடும்ப உறவினர் இருவருக்கு சிறப்பு விசா தரப்பட்டு வரவழைக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை மன்னர் சல்மான் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.