செப் 16: உலக ஓசோன் பாதுகாப்பு தினம்!

செப் 16: உலக ஓசோன் பாதுகாப்பு தினம்!

செப் 16: உலக ஓசோன் பாதுகாப்பு தினம்!

 

.இன்று பன்னாட்டு ஓசோன் பாதுகாப்பு தினம் .ஓசோன் இந்த வார்த்தையை  நம் அனைவரும் அறிவோம்   .ஓசோன் வளிமண்டலத்தை சுற்றியுள்ள ஒரு படலம். நாம் அனைவரும் இந்த பூமியில் வாழ்வதற்கு முக்கிய காரணம் இந்த ஓசோன் படலம் ஆகும். பூமியில் வாழ்பவர்களுக்கு அதிக சேதாரத்தை ஏற்ப்படுத்தக்கூடிய புறஊதாக் கதிர்களிடமிருந்து நம்மை பாதுகாக்கிறது. இந்த ஓசோன் படலத்தை முதலில் ஜெர்மனியை சேர்ந்த வேதியல் விஞ்ஞானி கிறிஸ்டியன் ப்ட்ரிச் சோன்பியன் என்பவர்1840 ம் ஆண்டு கண்டுபிடித்தார்.இந்த வாயுக்கள் சற்று நாற்றமுடையதாக இருந்ததால் நாற்றம் (smell) என்பதன் கிரேக்க சொல்லான ஒசோன் என்ற பெயரை வைத்தார்.அதன் பிறகு இதை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சார்லஸ் ஃபேப்ரின், ஹென்றி புய்சன் ஆகியோர். ஓசோனின் பண்புகளைப் பற்றி இங்கிலாந்து வானிலையியல் ஆராய்ச்சியாளர்  M.P.டோப்சன் விரிவாக ஆராய்ந்து ஸ்பேக்ரோபோட்டோமீட்டரை கண்டுபிடித்தார்.இதன் மூலம் தரையிலிருந்து ஓசோனை அளவிடுவதற்கு பயன்படுத்தினார்.1995 ம் ஆண்டு ஓசோன் மண்டல ஆய்விற்காக குருட்சன் மற்றும் நிகோலஸ்,ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்