நரிக்குறவர் – வரலாற்றில் காணாமல் போனவர்கள் !!

நரிக்குறவர் – வரலாற்றில் காணாமல் போனவர்கள் !!

நரிக்குறவர் – வரலாற்றில் காணாமல் போனவர்கள் !!

 

வறுமை, பிற மதத்தின் தூண்டுகோளால் மதமாற்றம், அரசாங்க சலுகையின்மை போன்ற காரணங்களால் வரலாற்று புத்தகத்தில் காணாமல் போனவர்கள் இவர்கள். தமிழ்நாட்டில் இச்சமூகத்தினர் பல ஊர்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக நாடோடிகளைப் போல் அவ்வப்போது இடம் பெயர்ந்து கொண்டிருப்பர். இவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில்
ஊசி, பாசி, போன்ற சிறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர். குறவர்கள் சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் அறிந்தவர்கள். நாடி பார்த்து நோய்க்குறி சொல்லுவார்கள். இன்றய நவீன மருத்துவம் வந்ததும் இவர்களை ஏமாற்றுக்காரர்களாக சமூகம் சொல்லுகின்றது.குறத்தி குறி சோசியம் இலக்கிய காலத்திலிருந்து பெருமை வாய்ந்தது.

பூர்வீகம்

குறவர்கள் மராட்டிய வழி வந்தவர்கள் என்றும், மாராட்டிய சிவாஜியின் படைவீரர்கள் என்றும் சொல்லுவதுமுண்டு. மேலும் இவர்கள் லம்பாடி இனத்தை சார்ந்தவர்கள் என்றும் சொல்வதுமுண்டு. குறவர் இனத்தில் பெண்கள் அழகுள்ளவர்கள், ஆணுக்கு நிகரானவர்கள். குறவர்களிடம் பெண்ணடிமை என்பது இல்லை. ஆனால் மாலை 6மணிக்குள் வெளியில் சென்ற பெண் கணவனை அடைய வேண்டும் என்பது இவர்களின் கட்டுப்பாடு. விதவை மறுமணம், வெளிப்படையான பாலுறவு இவர்களின் சமூகத்தில் உண்டு. பாலுறவுக்கு பஞ்சமில்லை என்பதால் இவர்களிடம் விபச்சாரம் என்பதில்லை

சமூகம்

படிப்பறிவு பெரும்பாலும் இல்லாதவர். எனினும், சுகாதாரத்தில் கவனம் உடையவர். காண்பதற்கு சுத்தமில்லாமல் இருந்தாலும், இவர்கள் வாழையடிவாழையாக உட்கொள்ளும் நாட்டுமருந்துகள், இவர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. குறிப்பாக குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் வராமலிருக்க, வருடத்திற்கு ஒரு முறை தங்களது பாரம்பரிய மருந்தினைத் தருவர். இதுபற்றி ஆராய்ந்தவர், இடாய்ச்சு நாட்டு அறிஞர். பெண்கள் கலைவேலைப்பாடுகளில் கைத்தேர்ந்தவர். ஆண்கள் துப்பாக்கிச் சுடுவதிலும், கவண்வில்லிலும்(உண்டிவில்) திறமை மிக்கவர். பேச்சு மொழி உண்டு. எழுத்து மொழி இல்லை. தமிழ்நாட்டு அரசால் இவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(B.C) என்று அறிவிக்கப்பட்டவர்கள். எனினும், மலைவாழ் மக்களின் இயல்பைக்(S.T) கொண்டிருப்பவர். பெரும்பாலும் நாடோடி வாழ்க்கை வாழ்பவர்கள் ஆவர். குருவிக்காரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு.

குறவர் செயல்கள் இன்றைய நாகரீகம்

குறவர்கள் வாழ்க்கை நாடோடி வகையை சார்ந்ததால், இவர்களின் வாழ்வில் நடைமுறை விஞ்ஞானமும் கலந்தே இருக்கும்.

* பாட்டுப்பாடி பச்சை குத்துவதும் குறத்திகளின் தொழில்,

இன்று பலர் நவீனமாக நாகரிகப் பச்சை குத்திக் கொள்கிறனர்.

* குறவர்கள் கூடாரங்களில் வசிப்பவர்கள் தற்போது அரசாங்கம் இலவச வீடு மற்றும் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி வருகின்றது. குறவர்கள் பிழைப்புக்காக ஊர் ஊராகச் சுற்றுவார்கள். எங்கு சென்றாலும் அவர்கள் பொருள்களையும் எடுத்தே செல்வார்கள். பொழுது போக்குகாக ரேடியோவை தோலில் கயிறு கட்டி வைத்துக் கொண்டு பாட்டுக் கேட்ட வண்ணம் இவர்கள் வேலையைப் பார்ப்பார்கள்.

தற்போது நாகரீகமாக கையடக்க ரேடியோ (walkman) கேட்டு மகிழ்கின்றோம்.

* இப்படி செல்லும் போது கைக்குழந்தையும் தன் தோலில் துணியை அடக்கமாக கட்டி அதன்மேல் குழந்தையை அமர்த்தி எடுத்துக் கொண்டு தன் வேலைகளில் ஈடுபடுவார்கள்.

தற்போது தன் குழந்தையை எடுத்துச் செல்ல தோலில் எடுத்து செல்லும் பை (baby sling) பயன் படுத்துகின்றோம்.

* குறவர்கள் மணிக்கோர்க்கும் போது பாசிமணி ஊசி மற்றும் இதரப பொருள்களை இடுப்பில் (பெண்கள் கழுத்தில்) பை அல்லது டப்பா கட்டி வைத்துக் கொண்டு சுலபமாக வேலை செய்வார்கள்.

தற்போது இடுப்புப்பை (pouch) பயன்படுத்துகின்றோம்.

இது போல் குறவர்கள் வாழ்வில் கலந்துவிட்ட விஞ்ஞானம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். குறவர்கள் வாழ்க்கை இயற்கையோடு சேர்ந்தே இருப்பதால் இவர்களின் வாழ்க்கையின் அனுபவ விஞ்ஞானம் அதிகம் காண முடியும்.

குறவர்கள் வாழ்வில் கலந்துவிட்ட விஞ்ஞானம்

இலக்கியங்கள், கதைகள், பாடல்கள், சினிமாக்கள் என்று அனைத்திலும் குறவன் குறத்தியைப்பற்றி சொல்லாத ஊடகங்கள் இல்லை!! ஆனால் இவர்கள் இந்திய சமுதாயத்தை சேர்ந்தவர்கள்தான் எனபது பலருக்கும் புரியாத புதிர். இதற்கு இவர்களின் சமுக அமைப்பும் சமுக கட்டுபாடும் மற்ற சமுகத்திடமிருந்து விளக்கியுள்ளது. தேர்தல் சமயத்தில் மட்டுமே இவர்களை இந்தியர்களாக மதிப்பதும் பிறகு மறந்துவிடுவதும் வாடிக்கையாகும்.

குறவர்கள் நாடோடி இனத்தை சார்ந்தவர்கள், இவர்களின் தொழில் மற்றும் சமுக அமைப்பு முறைகளில் 20வது வகை குறவர்கள் இருப்பதாக கூறுகின்றனர். குறவன் என்றவுடன் நமக்கு நினைவிக்கு வருவது தெருவோரங்களில் படுத்து உறங்கும் நரிக்குறவர்களைதான். ஆனால் குறவன் என்ற சமுகத்திற்கும் நரிக் குறவனுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. அவர்களது மொழி, கலாசாரம், பழக்கவழக்கங்கள் சாதாரண் குறவர் இன மக்களின் பழக்கவழக்கங்களில் இருந்து மாறுப்பட்டதாகும்.

தமிழ் நாட்டில் எத்தனை வகை குறவர் பிரிவுகள் உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.

1. குறவர்
2. உப்புக்குறவர்
3. தப்பைக்குறவன்
4. கந்தர்வக் கோட்டை குறவர்
5. ஆத்தூர் கீழநாடு குறவர்(சேலம்)
6. தாடிக் குறவர் (தஞ்சை திருச்சி)
7. மலைக்குறவர்
8. இஞ்சிக்குறவர் (தஞ்சை திருச்சி)
9. கொரவர்(செங்கல்ப்பட்டு)
10. தனிக்குறவர்
11. தோகமலைக் குறவர்
12. வரக நேரிக்குறவர்
13. களிஞ்சிதப்பை கொரவர் (த்ஞ்சை புதுகோட்டை)
14. மோண்டா குறவர்
15. பொன்னைக்குறவர் (வடாஅற்காடு)
16. தனிக்குறவர்
17. சேலம் மேலநாடு கொரவர்(மதுரை ,கோவை ஈரோடு, புதுகை,திருச்சி,சேலம்)
18. சக்கரத் தாமடை குறவர்
19. சேலம் உப்பு குரவர்
20. சாருங்கப்பள்ளி குறவர்

இப்படி பலவகை குறவர்கள் இருந்தாலும் எல்லோரும் பிந்தங்கிய நிலையில்தான் உள்ளனர்.

“நரிக்குறவர் இனவரைவியல்” என்ற நூல் கரசூர் பத்மபாரதி என்பவரால் 2005 -ம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது..

நன்றி
பத்மபாரதி


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்