இணையதளத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர்கள்:ஆய்வு தகவல்

இணையதளத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர்கள்:ஆய்வு தகவல்

இணையதளத்தில் சிக்கி தவிக்கும் இளைஞர்கள்:ஆய்வு தகவல்

 

தினசரி பெரும்பாலான நேரத்தை இணையத்தில் போக்கும் இளைஞர்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

பிரித்தானியாவில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட சிறுவர்கள் Smartphone மற்றும் Tablet Computers அதிகம் பயன்படுத்துவதாக அவர்களின் பெற்றோரே ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதில் 47% பெற்றோர்கள் தங்கள் வீட்டு இளைஞர்கள் அதிக நேரமும் கணனியில் மூழ்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலான சிறுவர்கள் தினசரி 3 மணி நேரத்திற்கும் அதிகமாக கணனியில் வீடியோ பார்ப்பதாகவும், சமூக வலைதளங்களில் உலவுவதாகவும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

Smartphones, Tablets போன்றவற்றை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துவது அவர்களை ஆபாச வலைத்தளங்களை பார்வையிட தூண்டும் வாய்ப்புகள் உள்ளதாக 57% பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதிக நேரத்தை சமூக வலைதளங்களில் போக்குவதால் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அதனால் ஈர்க்கப்பட்டு தூக்கத்தை தொலைக்க நேரிடலாம் என எச்சரிக்கும் அந்த ஆய்வறிக்கை,Facebook, Snapchat, Instagram போன்றவற்றில் பதிவு இடுவதில் கவனம் செலுத்துவதே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளன.

ஒட்டுமொத்தமாக 1056 பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் மூன்றில் ஒரு பகுதியினர் சமூக வலைத்தளங்கள்தான் தங்கள் பிள்ளைகளை அதிக நேரம் கணனியை பயன்படுத்த தூண்டுவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்