மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்

மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்

மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் மாரடைப்பால் உயிரிழந்த பெண்

 

கனடா நாட்டில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தியத்தில் பங்கேற்ற பெண் ஒருவர் வெற்றிபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாண்ட்ரீயல் மாகாணத்தில் நேற்று காலை 25வது மாரத்தான் ஓட்டப்பந்தயம் தொடங்கியுள்ளது.

இந்த விளையாட்டு போட்டியில் 53 நாடுகளை சேர்ந்த சுமார் 35 ஆயிரம் வீரர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், ஓட்டப்பந்தயம் தொடங்கிய நிலையில், அமெரிக்காவை சேர்ந்த 34 வயதான பெயர் வெளியிடப்படாத பெண் ஒருவரும் பங்கேற்று ஓடியுள்ளார்.

மாரத்தான் போட்டி நிறைவுபெறும் தருவாயில், வெற்றி இலக்கை நோக்கி நெருங்கிக்கொண்டிருந்த அந்த பெண்ணிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார்.

உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல், இரண்டாவது நிலையில் ஓடிவந்த 40 வயதான நபர் ஒருவருக்கும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுமார் 20 வீரர்களுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டதால், இவர்களின் 16 வீரர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியிலும் 32 வயதான நபர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த மாரத்தான் போட்டியில் கியூபெக் மாகாணத்தை சேர்ந்த நிக்கோலஸ் பெர்ராட் என்பவர் 2 மணி நேரம், 26 நிமிடங்கள் மற்றும் 42 நொடிகளில் போட்டியை நிறைவு செய்து வெற்றிபெற்றுள்ளார்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்